ஒரு மாலை
இளவெயில் நேரம்
அழகான இலை உதிா் காலம்
சற்று தொலைவிலே அவள்
முகம் பாா்த்தேன் அங்கே
தொலைந்தவன் நானே...
பாடல் தூரத்தில் எங்க ஒலிக்க, பிரவீனா நான்கைந்து சிறுவர்களுடன் ஒரு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாள்...
" அக்கா இதுதான் கடைசி பால்... ஒரு ரன் மட்டும் போதும்... எப்படியாச்சும் எடுத்துரு..." என்று ஒரு சிறுவன் பிரவீனாவை பார்த்து கத்திக் கொண்டிருந்தான்...
" டேய் நீ ஒன்னும் கவலைப்படாத நான் இப்போ சிக்ஸர் அடிச்சு காட்டுறேன் பாரு... " என்று பிரவீனாவும் அவனுக்கு மறுமொழி கூறிக் கொண்டிருந்தாள்..
" அரை மணி நேரமா வெறும் டயலாக் மட்டும்தான்... ஒரு ரன் கூட எடுக்கல... அவுட் ஆகவும் இல்ல... " என்று பிரவீனாவைப் பார்த்து முறைத்தபடி மனதிற்குள் நினைத்துக் கொண்டான் அந்த சிறுவன்...
மற்றொரு சிறுவன் பந்தினை வீச, பிரவீனா அதனை தூக்கி அடித்தாள்... பந்து மைதானத்தை விட்டு வெளியே விழுந்தது...
" ஹேய் கண்டிப்பா இது சிக்சர் தான்..... " என்று பிரவீனா கத்திக் கொண்டிருந்தாள்... அவள் மட்டுமே கத்திக் கொண்டிருக்க, சுற்றி இருந்த மற்ற சிறுவர்கள் அவளை முறைத்துக் கொண்டிருந்தார்கள்...
"டேய்... என்னங்கடா சிக்ஸர் அடிச்சிட்டேன்...." என்று பிரவீனா அவர்களைப் பார்த்து சொல்ல, அங்கிருந்த ஒரு சிறுவன், "அதெல்லாம் இருக்கட்டும் அந்த பந்தை மட்டும் எடுத்துட்டு போகலைன்னா எங்க அம்மா என்னை கொன்னுடுவாங்க... ஒழுங்கா போய் அந்த பந்தை தேடி எடுத்துட்டு வா..." என்று முறைத்துக் கொண்டே சொன்னான்....
" சரி சரி ரொம்ப தான் பண்றீங்கடா வாங்க நீங்களும் போய் தேடி எடுக்கலாம்... " என்று அவர்களை சமாதானப்படுத்தி விட்டு அங்கிருந்து பந்தை தேடி பிரவீனா, தனது படைகளுடன் சென்றாள்...
மைதானத்தை விட்டு வெளியே வந்த பொழுது, வந்து அங்கே இருந்த ஒரு இளைஞனின் கையில் இருந்தது... அவனுக்கு முன்னால் இருந்த ஒரு 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி அவனை கண்டபடி திட்டிக் கொண்டிருந்தாள்... " உங்களுக்கெல்லாம் பந்து விளையாட வேற இடமே கிடைக்கலையா??? இப்படித்தான் போற, வர்ற ஆளுங்க மேல பந்து அடிச்சு விளையாடுவீங்களா??? பப்ளிக் நியூசன்ஸ் கிரியேட் பண்றீங்கன்னு சொல்லி உங்க மேல எல்லாம் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கணும்..... " என்று ஏதேதோ கத்திக் கொண்டிருக்க அந்த இளைஞன் அமைதியாக, குழம்பிய முகத்துடன் அந்த பெண்மணியை பார்த்துக் கொண்டிருந்தான்...
அவனின் பரிதாபமான முகத்தையும் அந்த பெண்மணியின் திட்டுக்களையும் கேட்டுக் கொண்டிருந்த பிரவீனாவிற்கு சிரிப்பு தாங்க முடியவில்லை... அடக்க முடியாமல் சத்தமாக வாய் விட்டு சிரித்து விட்டாள்.... அவளின் சிரிப்பு சத்தம் கேட்டு அந்த பெண்மணி, அவளையும் திரும்பிப் பார்த்து ஒரு முறைப்பு முறைத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்....
இப்போது அந்த இளைஞன் அவளை பரிதாபமாக பார்க்க, "ஐயையோ ரொம்ப சாரிங்க.... அது எங்களுடைய பந்து தான்... நாங்க இங்க கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தோம்... பந்து கிரவுண்ட் விட்டு வெளிய வரும்னு நினைக்கல... சாரி மன்னிச்சிடுங்க...." என்று தனது சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டே சொன்னாள்...
இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை... அமைதியாக அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பந்தை அங்கிருந்த சிறுவர்களிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்....
அவன் தன்னைப் பார்த்த பார்வை, அவளை உள்ளுக்குள் ஏதோ செய்தது.... அவளும் அங்கிருந்து சென்று விட்டாள்... அங்கிருந்து கிளம்பினாலும் அவன் பார்த்த அந்த பார்வை அவனின் விழிகள் எல்லாம் அவளது மனதில் கல்வெட்டாக பதிந்து போனது...
இதை அவள் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே அந்த விழிகளுக்கு சொந்தக்காரன், தன் காதல் கணவனாகி, தற்போது அவள் அருகில் படுத்துக் கொண்டு, அன்று பார்த்த அதை பார்வையால் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்....
To be continued....
"பேபி... குட் மார்னிங்...எழுந்துட்டியா??" என்று கேட்டபடி, கதிர் வேகமாக படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான்... அவன் அருகில் படித்துக் கொண்டு அவனை ரசித்துக் கொண்டிருந்த பிரவீனா, அவளின் பார்வை வட்டத்தில் அவனின் முகம் இல்லாது போகவே, அவளும் அவனோடு சேர்ந்து எழுந்து அமர்ந்தாள்... இரவில் சரியாக தூங்காததால் கதிரின் முகம் சற்று சோர்வாக இருந்தது...
"பேபி.. இரு.. நான் காபி ஆர்டர் பண்றேன்..." என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த இன்டர்காமை அழைக்கப் போக அவன் கரம் பற்றி அவனைத் தடுத்த, பிரவீனா, "இல்லடா.... நீ பிரெஷ் அப் ஆகு.. நான் ஆர்டர் பண்றேன்.." என்று சொல்லிவிட்டு தொலைபேசியை கையில் எடுத்தாள்..
நேற்றைய நிகழ்வுகளின் சாயல் அவளின் முகத்தில் இல்லாது போக, கதிர் சற்று நிம்மதியாக, அங்கிருந்து குளியலறை நோக்கி நடந்தான்... காபி ஆர்டர் செய்த பிரவீனாவின் மனதில் நேற்றைய சம்பவங்கள் வந்து போய் சற்று பதற்றமாக இருந்தாலும், தன்னுடைய மனநிலை தன் கணவனையும் பாதிக்கிறது என்று புரிந்து கொண்டவள், அவனுக்காக அதிலிருந்து வெளியே வர முயன்று கொண்டிருந்தாள்...
கதிர் குளியலறையில் இருந்து வெளியே வரவும், அவள் ஆர்டர் செய்த காபியை ரூம் பாய் கொண்டு வரவும் சரியாக இருந்தது.... வந்திருந்த காபியை இருவரும் அமைதியாக அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தார்கள்....
"பேபி..." கதிர் அவளை அழைக்க, பிரவீனா நிமிர்ந்து என்ன என்பது போல அவனின் முகத்தைப் பார்த்தாள்....
"நாம எங்கயாவது வெளியே போலாமா?? ஆர் யூ ஓகே??.. "
தனக்காகத் தான் அவன் அவ்வாறு கேட்கிறான் என்று புரிந்து கொண்ட பிரவீனா, "ம்ம்ம்.. போலாம்.." என்று மட்டும் பதில் சொன்னாள்...
"சரி ஓகே.. நீ போய் ரெடி ஆகு... நான் எங்கே போலாம்னு பாத்துட்டு சொல்றேன்... "
"ம்ம்ம்.. ஓகே.." என்று சொல்லிவிட்டு பிரவீனா குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்... கதிர் ரிசெப்ஷனில் பேசி கார் அரேஞ் செய்துவிட்டு அன்றைய தினம் என்ன இடங்களை சுற்றிப் பார்க்கலாம் என்று விசாரித்து விட்டு, மனதிற்குள்ளேயே ஒரு அட்டவணை தயார் செய்து கொண்டான்...
ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை கலைத்தது அவனின் அலைபேசியில் வந்த நோட்டிபிகேஷன்.... திரை ஒளிர அங்கே அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் பிரவீனா... அவளின் முகத்தைப் பார்த்ததும் தன்னை மறந்து ரசிக்கத் தொடங்கினான் கதிர்...
வட்ட முகம், முட்டைக் கண்கள், தேன் சிந்தும் இதழ்கள் என்று அவனை ஈர்த்துக் கொண்டிருந்தாள்.. அப்போது குளியலறைக் கதவு திறந்து கொண்டு, தலையில் ஈரம் சொட்ட, பனியில் நனைந்த ரோஜா போல், ஆங்காங்கே நனைந்த வெண்ணிற உடையோடு வெளியே வந்து நின்றாள் பிரவீனா.... வெளியே வந்து கதிரின் முகத்தைப் பார்க்க, அவனின் பார்வை அவளை இம்சித்தது..
தன்னவனின் பார்வை தந்த கூச்சத்தில் உடல் முழுதும் சிவந்து நின்றாள் அவள்.. ஆளை விழுங்கும் அவனின் பார்வையில் விரும்பியே தன்னை இழந்து கொண்டிருந்தாள்... நாணம் அவளின் மனதை கட்டுப்படுத்த ஒன்றும் அறியாதவள் போல் அங்கிருந்த கண்ணாடி முன் போய் நின்றாள்...
அவளின் நிலை அறிந்த கள்வன் அவனோ அவளை நோக்கி அடியெடுத்து வைத்தவன், அவளின் பின்புறமாக போய் நின்றவன், அவளின் இடையைக் கட்டியபடி பின்னால் இருந்து அவளை அணைத்துக் கொண்டான்.. அவனின் கரங்கள் பட்டு உறைந்து நின்றாள் பிரவீனா.. மெதுவாக அவளின் முகம் நோக்கி கீழே குனிய அவளின் சிவந்த காது மடலில் மென்மையாய் ஒரு முத்தம் பதித்தான்...
To be continued....