வணக்கம் கொஞ்சம் depression-ல்
Post செய்யப்படும் பதிவு தவறுகள் இருப்பின் தெரிவிக்கலாம்.
(Thalaiபு)
ஏன் எப்போதும் ஏதோ தனிமை.
தனிமையின் வெற்றிடத்தை புத்தகம், இசை,சினிமா என ஏதோ ஒன்றே இறுக்கமாக பற்றிக் கொண்டு தற்காலிகமாக தப்பித்துக் கொள்கிறோம்..
தனிமையின் பெரும் தாகத்தை நிரப்ப ஏதோ ஒரு பிடிப்பு தேவைப்படுகிறது..
மனிதர்கள்,
ஒருவரின் அன்பை/காதலைப் பெறுவதற்காக இந்த வாழ்வில்
எத்தனை எத்தனை பிரயத்தனங்கள்..
எத்தனை எத்தனை முன் ஒத்திகைகள்..
எத்தனை எத்தனை முகமூடிகள்,
எத்தனை எத்தனை முலாம் பூசிய சொற்கள். ஆனால், அன்பை வேண்டி நிற்பதை விட துயரம் வேறு ஏதுமில்லை..
ஒரு போதும் அன்புக்காக ஏங்கி நிற்கும் நிலையை எதிர்கொள்ளக் கூடாது.. கேட்டுப் பெறும் அன்பு பரிதாபத்திற்கு நிகரானது.. அன்பை தருதல் பெறுதல் அதுவாய் நிகழ வேண்டும்..
அன்பைத் தேடி அலைய வேண்டிய தேவை ஏதுமில்லை..தனிமையின் துணை இருக்கும் வரை..
விரும்பி ஏற்கும் தனிமையின் சுகம் அலாதியானது.. நமக்குப் பிடித்த உலகத்தை அது கட்டமைக்கிறது..
அந்த உலகத்தில்
எல்லோரும் அழகானவர்கள்..
எல்லோரும் அன்பானவர்கள்..
தொடர் தோல்விகளின் இடையே அவ்வப்போது வெற்றியும் கிடைக்கிறது.. நமக்கு பிடித்ததை செய்யும் பொழுது நம்முடன் இணைந்து கொண்டாட மனிதர்கள் இருக்கிறார்கள், தோள் சாய்ந்தழ மனிதர்கள் இருக்கிறார்கள், கண்ணீரை ஏந்திக் கொள்ள கரங்கள் காதலுடன் அவன் முன்னால் நீட்டப்படுகின்றன..
அந்த தனிமையின் கனவுலகம் அவ்வளவு அழகானது..
ஆம்,தனிமையின் வெற்றிடத்தை புத்தகம், இசை,சினிமா என ஏதோ ஒன்றை கொண்டு நிரப்ப முயற்சிக்கிறோம்..
ஆனால், இறுதியில் தனிமையிடமே
சென்று அடைகிறோம்..
தனிமையையும் அழகானதே

~dewhisky❤
Last edited: