• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
(வாலி list)
1001581754.jpg
School-ல இருந்து சாகுறவர ஒன்னா இருக்க Friends,
வயசாகாத அம்மா அப்பா,
செத்துப் போகாத செல்லமா வளர்த்த நாய்/பூனைக்குட்டி,
நினச்சதும் மழ,
மழை-ல தெரியுற நட்சத்திரம்,
வீடு மாத்தாத பக்கத்து வீட்ல வாடகைக்கு குடியிருக்கவங்க,
முடியாத Sunday,
விடியாத Monday,
எப்ப Trip க்கு கூப்டாலும் உடனே போலாம்ன்னு சொல்ற Friends,
Month end la Purse la பத்தாயிரம்,
திட்டாத Manager,
முடிஞ்சி போகாத College Life,
Battery தீராத மொபைல்,
நமக்கு பிடிச்சவங்க பேர சொன்னதும் பூ பூக்குற மரம்,
சாதிக்காவும் சாமிக்காகவும் அடிசிச்சிக்காத மனுசங்க,
கேட்ட உடனே வரம் கொடுக்குற சாமி,
கவலையில்லாத ஒரு நாள்,
எப்பவும் தூரத்துல கேட்டுட்டே இருக்க ஒரு புடிச்ச பாட்டு,
வெறுத்துப் போகாத வேல,
கலைஞ்சு போகாத கனவு,
சலிச்சு போகாத வாழ்க்க., etc., etc.,

இதெல்லாம் நடக்க வாய்ப்பில்ல..

ஆனா,நடந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்ல.
.✨
~Dவிஸ்கி✨
 
(வாலி list)
View attachment 236325

ஆனா,நடந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்ல..✨
~Dவிஸ்கி✨
Athan nadakkavae nadakatheyy:envy:
 
:cry1: kalanju pogadha kanavu !!!
 
Passing clouds: ☁️
View attachment 233409

இந்த வாழ்க்கை தினம் தினம் பல மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது..

அதில்,சிலர் நாம் யார் என்று நம்மை நமக்கே அறிமுகப்படுத்திவிட்டு, வழியெங்கும் பூக்களை இறைத்துவிட்டு, சாதாரணமாக கடந்து செல்கிறார்கள்..

உண்மையில் அவர்களே தேவதைகள்.
✨❤​
~dewhisky✨
சத்தம் இருக்கும்போது பூ இறைக்கிறார்களோ இல்லையோ.

சப்தமும் அடங்கிய பிறகு கண்டிப்பா பூமாலை மரியாதையுடன் அனுப்பி வைப்பார்கள்....

Sugarlips....
 
:Cwl:
(யாரும் இல்லாத கடைக்கு "ஆத்தபட்ட" டீ)
1001584642.jpg

நல்லதே நினை நல்லதே நடக்கும், எண்ணம் போல் வாழ்க்கை,
Hope is the best thing etc.,etc.,
இந்த மாதிரி Positive words எல்லாமே சொல்ல நல்லாயிருக்கும்
கேக்க நல்லாயிருக்கும்..

ஆனா, Reality வேற மாதிரி இருக்கும்..
நான் எல்லோருக்கும் நல்லது தான் பண்றேன் எனக்கு மட்டும்
ஏன் இப்படியெல்லாம் நடக்குது ன்னு நிறைய தடவ நினச்சிருப்போம் புலம்பியிருப்போம்..

எங்கயோ படிச்ச ஞாபகம்,
நீங்க Veg-ன்றதால சிங்கம் முன்னாடி போய் நின்னா உங்கள் சாப்டாதுன்னு இல்ல.. நீங்க நல்லவங்க -ன்றதுனால யாரும் உங்கள ஏமாத்த மாட்டாங்கன்னு கிடையாது..

நல்லது பண்ணா நல்லது நடக்கும்-ன்ற Hope Ok..but, Expect பண்ணும் போது தான் Disappoint la முடியுது...

Simple a சொல்லணும்னா
Hope for the best & Prepare for the worst அவ்ளோ தான்..

இது நடந்தா என்ன பண்றது??

இது நடக்காட்டி என்ன பண்றது??

எந்த Tension um வேணாம்..

பிரச்சினையோ சந்தோஷமா நம்ம எப்படி எடுத்துக்கிறோம்னு தான் இருக்கு அதோட Intensity.

இன்னும் நிறைய Tragedy -um இருக்கு
Magic -க்கும் இருக்கு...
வாழ்க்க ரொம்ப சின்னது..

இந்த நொடி சந்தோஷமா இருங்க அவ்ளோ தான் Life..

நமக்கே நமக்கான இந்த ஒரு சிறு வாழ்வை முழுமையாக வாழ்வோம்..

அதுவே வாழ்வின் சுவாரசியம்..✔

~டிவிஸ்கி❤✨
 
(Men in L❤ve)
1001603485.jpg
நமக்கு மிகப் பிடித்தவர்களுடன் மட்டுமே
 பிடித்த காட்சித் துணுக்கை உயிர் மாறாமல் ஒப்பிக்க முடியும்..

பிடித்த பாடலை "இந்தப் பாட்டு கேட்ருக்கியா" என்று சொல்லி அதிகம் பிடிக்க வைக்க முடியும்..

ஏதோ ஒரு பயணத்தில் எதேச்சையாக பார்த்த மனிதரைப் பற்றி பல மணி நேரம் கதை பேசி தீர்க்க முடியும்..

கவிதை என கிறுக்கியதை எல்லாம் படித்து சிரித்துக் கிழித்து போட முடியும்..

அனுமதி கேட்காமல் வாய்விட்டு சிரிக்க முடியும்..

கேட்கும் கேள்விகளுக்கு பயமில்லாமல் பதில் சொல்ல முடியும்..

நமக்கு என்ன பிடிக்கும் என்பதை நம்மை விட அதிகம் தெரிந்து வைத்திருப்பதால் அவனை/அவளை நமக்கு நாளோடு நாளும் மிகப் பிடித்து விடுகிறது..

அவர்கள் அவர்களின் வாழ்வை நம்மிடம் திணிப்பதில்லை.. நம்மை யார் என்று கண்டடைய வைக்கின்றனர்..

அவர்கள் உலகத்தின் முகமூடியை நம் மீது அணிவித்து அழ வைப்பதில்லை..

நம் இயல்பின் அழகியலை முழுதாக ரசிக்கின்றனர்..

அவர்களுடனான ஆழ்ந்த உரையாடலில் நாம் இந்த உலகைத் தொலைப்பதால் அந்த நொடி அவர்களே உலகமாகிறார்கள்..

அந்த அன்பில் ஆண் பெண் பேதம் இல்லை,காதல் இல்லை, துளிக் காமம் இல்லை, மனிதன் பெயர் சூட்டிய
வேறு எதுவும் இல்லை..

எந்த எதிர்பார்ப்புகளுமின்றி பேரன்பை மட்டும் தன் மொழியாக கொண்டிருப்பதால் அவர்கள் றெக்கைகள் இன்றி இந்த பூமியில் உலவும் தேவதைகள்

ஒருவேளை அவர்களைப் பாராமலே இந்த முழு ஜென்மம் போயிருந்தால்..?!!!

~Dவிஸ்கி✨
 
(ஆடி மாதம் ✨)
1001625352.jpg
ஒவ்வொரு வருடமும் ஆடி முதல் வெள்ளி எங்கள் ஊரில் திருவிழாக் காலம்..

பள்ளி படித்தாயிற்று.... கல்லூரி முடித்தாயிற்று..வேலைக்கு சென்று ஆண்டுகள் பல கடந்து விட்டன..

ஆனால்,இன்றும் கூட அந்த திருவிழாவின் மீதான ஆர்வம் துளியும் குறைந்ததில்லை..

இந்த திருவிழா சாதாரண ஏதோ ஒரு கடவுளை கொண்டாடும் நிகழ்வு மட்டுமல்ல.. எனக்கு கடவுள் நம்பிக்கையும் இல்லை.

பல வருடங்களாக சந்திக்காத பள்ளி நண்பர்கள் பலர் இந்த திருவிழாவில் தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள்..

ரிமோட் கார் கேட்டு அம்மாவிடம் அடம்பிடித்து அப்பா வாங்கி தரக் காசில்லாமல் ஐந்து ரூபாய் கார் வாங்கித் தர அழுது கொண்டே வீடு வந்து அடுத்த நொடி வாங்கி வந்த பொறி உருண்டையை ருசித்துக் கொண்டே அந்தக் காருடன் பயணிக்க தொடங்கிய நாட்கள் கவிதையானவை..

திருவிழாவிற்கு ஒரு மாத காலம் முன்பாகவே திருவிழாவை பற்றிய கற்பனையில் வாழ்ந்த நாட்களும்..

திருவிழா முடிந்த அடுத்த ஒரு மாதம் சுற்றிய ரங்கராட்டினங்களை பற்றியும் கொறித்த நொறுக்குத் தீனிகளைப் பற்றியும் நண்பர்களுடன் அளவளாவி லயிப்பதில் அப்பொடியொரு திருப்தி..

இந்த வருடமும் அதே திருவிழா.. ஆனால்,நிரம்பவே மாறிவிட்டது..

கடவுள்கள் மீதான பயம் குறைந்துவிட்டது.. புரிதல்கள் அதிகமாகிவிட்டது..

இப்போது பத்து ரிமோட் கார் வாங்கும் அளவிற்கு காசு இருக்கிறது.. அதைப்பற்றி சிலாகித்துப் பேச பத்து நண்பர்களை காணவில்லை..

அடித்து பிடித்து ஏறிய ரங்கராட்டினங்களை இன்று தொலைவில் இருந்து ரசிக்கவே அதிகம் பிடித்திருக்கிறது..

சற்று தொலைவில் தெரியும் ரங்கராட்டினம், நீ விரும்பினாலும் விரும்பாவிட்டால் என்னை போல வாழ்க்கை சுற்றிக் கொண்டே இருக்கும்..

சில நேரங்களில் தொலைவில் இருந்து என்னை ரசி.. சில நேரங்களில் என்னுள் இருந்து ரசி.. ஆனால்,நான் நீ உயிரோடு இருக்கும் வரை எப்போதும் அங்கே தான் இருப்பேன் என்பது போல சுற்றிக் கொண்டிருந்தது..

திருவிழா is an Emotion ❤​
- D விஸ்கி✨
 
வணக்கம் :( கொஞ்சம் depression-ல்
Post செய்யப்படும் பதிவு தவறுகள் இருப்பின் தெரிவிக்கலாம்.
(Thalaiபு)
ஏன் எப்போதும் ஏதோ தனிமை.

View attachment 231184

தனிமையின் வெற்றிடத்தை புத்தகம், இசை,சினிமா என ஏதோ ஒன்றே இறுக்கமாக பற்றிக் கொண்டு தற்காலிகமாக தப்பித்துக் கொள்கிறோம்..

தனிமையின் பெரும் தாகத்தை நிரப்ப ஏதோ ஒரு பிடிப்பு தேவைப்படுகிறது..

மனிதர்கள்,

ஒருவரின் அன்பை/காதலைப் பெறுவதற்காக இந்த வாழ்வில்
 எத்தனை எத்தனை பிரயத்தனங்கள்..
எத்தனை எத்தனை முன் ஒத்திகைகள்..
எத்தனை எத்தனை முகமூடிகள்,
எத்தனை எத்தனை முலாம் பூசிய சொற்கள். ஆனால், அன்பை வேண்டி நிற்பதை விட துயரம் வேறு ஏதுமில்லை..

ஒரு போதும் அன்புக்காக ஏங்கி நிற்கும் நிலையை எதிர்கொள்ளக் கூடாது..
கேட்டுப் பெறும் அன்பு பரிதாபத்திற்கு நிகரானது.. அன்பை தருதல் பெறுதல் அதுவாய் நிகழ வேண்டும்..

அன்பைத் தேடி அலைய வேண்டிய தேவை ஏதுமில்லை..தனிமையின் துணை இருக்கும் வரை..

விரும்பி ஏற்கும் தனிமையின் சுகம் அலாதியானது.. நமக்குப் பிடித்த உலகத்தை அது கட்டமைக்கிறது..

அந்த உலகத்தில்
எல்லோரும் அழகானவர்கள்..
எல்லோரும் அன்பானவர்கள்..
தொடர் தோல்விகளின் இடையே அவ்வப்போது வெற்றியும் கிடைக்கிறது.. நமக்கு பிடித்ததை செய்யும் பொழுது நம்முடன் இணைந்து கொண்டாட மனிதர்கள் இருக்கிறார்கள், தோள் சாய்ந்தழ மனிதர்கள் இருக்கிறார்கள், கண்ணீரை ஏந்திக் கொள்ள கரங்கள் காதலுடன் அவன் முன்னால் நீட்டப்படுகின்றன
..
அந்த தனிமையின் கனவுலகம் அவ்வளவு அழகானது..

ஆம்,தனிமையின் வெற்றிடத்தை புத்தகம், இசை,சினிமா என ஏதோ ஒன்றை கொண்டு நிரப்ப முயற்சிக்கிறோம்..

ஆனால், இறுதியில் தனிமையிடமே
சென்று அடைகிறோம்..

தனிமையையும் அழகானதே ✨
~dewhisky✨
Very good lines... Da ... Unakku ivvalavu arivanu yenakku konjam shock...... Any way very good all the best
 
(Men in L❤ve)
View attachment 244810
நமக்கு மிகப் பிடித்தவர்களுடன் மட்டுமே
 பிடித்த காட்சித் துணுக்கை உயிர் மாறாமல் ஒப்பிக்க முடியும்..

பிடித்த பாடலை "இந்தப் பாட்டு கேட்ருக்கியா" என்று சொல்லி அதிகம் பிடிக்க வைக்க முடியும்..

ஏதோ ஒரு பயணத்தில் எதேச்சையாக பார்த்த மனிதரைப் பற்றி பல மணி நேரம் கதை பேசி தீர்க்க முடியும்..

கவிதை என கிறுக்கியதை எல்லாம் படித்து சிரித்துக் கிழித்து போட முடியும்..

அனுமதி கேட்காமல் வாய்விட்டு சிரிக்க முடியும்..

கேட்கும் கேள்விகளுக்கு பயமில்லாமல் பதில் சொல்ல முடியும்..

நமக்கு என்ன பிடிக்கும் என்பதை நம்மை விட அதிகம் தெரிந்து வைத்திருப்பதால் அவனை/அவளை நமக்கு நாளோடு நாளும் மிகப் பிடித்து விடுகிறது..

அவர்கள் அவர்களின் வாழ்வை நம்மிடம் திணிப்பதில்லை.. நம்மை யார் என்று கண்டடைய வைக்கின்றனர்..

அவர்கள் உலகத்தின் முகமூடியை நம் மீது அணிவித்து அழ வைப்பதில்லை..

நம் இயல்பின் அழகியலை முழுதாக ரசிக்கின்றனர்..

அவர்களுடனான ஆழ்ந்த உரையாடலில் நாம் இந்த உலகைத் தொலைப்பதால் அந்த நொடி அவர்களே உலகமாகிறார்கள்..

அந்த அன்பில் ஆண் பெண் பேதம் இல்லை,காதல் இல்லை, துளிக் காமம் இல்லை, மனிதன் பெயர் சூட்டிய
வேறு எதுவும் இல்லை..

எந்த எதிர்பார்ப்புகளுமின்றி பேரன்பை மட்டும் தன் மொழியாக கொண்டிருப்பதால் அவர்கள் றெக்கைகள் இன்றி இந்த பூமியில் உலவும் தேவதைகள்

ஒருவேளை அவர்களைப் பாராமலே இந்த முழு ஜென்மம் போயிருந்தால்..?!!!

~Dவிஸ்கி✨
:heart1::hearteyes:
 
Top