காத்திருப்பது சுகமே:
உன் வரவுக்காக
காத்திருப்பது சுகமே
தீண்டாமல் பேசி
பிரிந்தோம்
அடுத்த சந்திப்பிற்கு
ஏக்கம் கொண்டோம்
உன்னுள் கரைத்திட
காத்திருப்பது சுகமே
என் எண்ணம் நீயாக
உன் எண்ணம் நானாக
நொடிகள் நிமிடங்கள் ஆக
மணிகள் நாட்கள் ஆக
மாதங்கள் மறைந்து போக
தூரங்கள் தொல்லை ஆக
தூக்கத்தில் மையல் கொண்டு
சந்திக்கும் பொழுதுகளில்
கண்களால் காதல் செய்து
காத்திருப்பது சுகமே
உன் கரம்
ஏந்தும் நாட்களுக்கு
காத்திருப்பில் கரையும்
மரு.
உன் வரவுக்காக
காத்திருப்பது சுகமே
தீண்டாமல் பேசி
பிரிந்தோம்
அடுத்த சந்திப்பிற்கு
ஏக்கம் கொண்டோம்
உன்னுள் கரைத்திட
காத்திருப்பது சுகமே
என் எண்ணம் நீயாக
உன் எண்ணம் நானாக
நொடிகள் நிமிடங்கள் ஆக
மணிகள் நாட்கள் ஆக
மாதங்கள் மறைந்து போக
தூரங்கள் தொல்லை ஆக
தூக்கத்தில் மையல் கொண்டு
சந்திக்கும் பொழுதுகளில்
கண்களால் காதல் செய்து
காத்திருப்பது சுகமே
உன் கரம்
ஏந்தும் நாட்களுக்கு
காத்திருப்பில் கரையும்
மரு.