AgaraMudhalvan
Epic Legend
Day -1
காதலர் தினம் முன்னிட்டு உங்களுடைய கவிதைகள் வரவேற்கப்படுகின்றது.இக்கவிதைகள் காதலித்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு, இனி காதலிக்க தொடங்குபவர்களுக்கும் காதலை சொல்லாமல் ஏங்கி கொண்டிருப்பவர்களுக்கும் சமர்ப்பணம்.
அவளோடு மட்டுமன்றி யாரோடும் பகிராத இரகசிய காதலது.

உயிருக்கும் உணர்வுக்குமிடையே ஒற்றை உருண்டையாய் தள்ளாடிக் கொண்டிருந்த நாட்கள்.அவள் விழி பார்த்தால் விடியல் வழி சென்றால் காதல் வலம்.

முன் தொங்கும் ரெட்டை ஜடையில் சுற்றப்பட்டிருந்த ரிப்பன்கள் தினமொரு நிறத்தில் ஜொலித்த வானவிற்கள்.
நெஞ்சோடு அணைத்திருந்த நோட்டுப் புத்தகங்களில் எழுதாத கவிதைகள்.

கடந்த காலம் மறைந்து நிகழ்காலத்தில் சந்தித்த பொழுது.
சரளமாக சொற்பொழிவு ஆற்றுபவனின் சொற்கள் திக்கிக்கொள்கிறது.

நெஞ்சம் படபடக்க நுரையீரல் திகைக்க விரல்கள் நடுநடுங்க வியர்த்து விறுவிறுத்து கன்னி வார்த்தை உதிர்க்கிறது காதலித்தவனின் உதடுகள்.
"நல்லா இருக்கீங்களா"?
