

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்.
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்..
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்..
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்..
