என்னை போலவே
காற்று இட்டுக்கட்டும் பாட்டு
இனிமை என்னை போலவே
பூத்து எட்டி பார்க்கும் நாத்து
இளமை
ஏரி கரையில் எழுந்து
ஆடும் சிறு குறிஞ்சி பூவும் என்
கூந்தல் தானே தேடும் நீரின்
அலையில் நடனமாடும் சிறு
வண்ண மீன்கள் என் விழிகளை
கண்டு ஆடும்
போகும் இடம் எங்கும்
என் பின் வரும் அந்த வானம்
என் மேல் காதல் கொண்டால்
அடி என்னடி செய்வேன் நானும்