கண்ணில் ஒரு கள்ளம் இல்லை
விண்வெளியில் பறக்க ஒரு
விசா தேவையில்லை
கை விலங்கு ஏதும் இல்லை
பூமி ஒரு பள்ளிக்கூடம்
பூவை மட்டும் படித்திருப்போம்
புத்தகம் தேவையில்லை
எங்கள் புத்தியில் பாரமில்லை
ஆணும் பெண்ணும் அன்பால் அன்பால்
நட்பை வளக்கலாம்
ஹேய் காதலையும் கடந்து
ஒரு கற்பை வளர்க்கலாம்
நாம் கண்டோம் புதிய இயக்கம்
இது கண்ணீர் துளியை ஒழிக்கும்