கடல் கரையில் நின்று,
அலைகளை எண்ணும்
போதெல்லாம்,அவன்
நினைவுகளே கரை ஒதுங்கியது.
நிலா வெளிச்சத்தில்,
அவனுடைய நிழலே
என்னை தனிமையில் தேற்றியது.
சேராமல் போனாலும்,
சேர்ந்து வாழ்ந்த நாட்கள் போதுமே,
காதல் குறையாமல் இருப்பதற்கு…!
சொன்ன காதலை விட
சொல்லாத காதலும்...
சேர்ந்த காதலை விட
சேராத காதலும் மிகையே!
நினைவுகளில் தன் காதலை
எண்ணி அவளை மறவாத
அவளின் காதலன்!

