AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆சொல்லா காதல்༆•❤꧂
அன்புக்காக தாகம் கொண்ட என் மனதிற்கு கிடைத்த அடை மழை நீ.
நீ நீண்ட தூரத்தில் இருந்தாலும் உன்னை நினைக்க என் மனம் மறந்ததில்லை காரணம் நீ என் இதயத்தில் இருப்பதனால்.
மூச்சு விட காற்று இல்லை என்றாலும் நேசிக்க உன் நினைவுகள் மட்டும் இருந்தால் போதும் நான் உயிர் வாழ்வேன்.
உனக்கு எவ்வளவு வலித்தாலும் பரவாயில்லை எனக்கு எந்த வலிகளும் வந்து விட கூடாது என நினைக்கும் உன் அன்புக்கு நிகர் இந்த பூமியில் ஏதும் இல்லை.
நினைவுகள் ஒரு தனி சுகத்தை மனதிற்கு கொடுக்கும் அந்த நினைவுகளிலும் எனக்கு பிடித்த நினைவுகள் உன்னை பற்றிய நினைவுகள் தான்.
எந்த சூழ்நிலையிலும் மறக்காமல் இருப்பது உண்மையான அன்பு இல்லை. எந்த சூழ்நிலையிலும் நம்மை நேசித்தவர்களை வெறுக்காமல் இருப்பது தான் உண்மையான அன்பு.
உனக்கு ஒரு வரையறையே கிடையாதா எப்போதும் அன்பை கொட்டும் அருவியா நீ.
உன் காதல் சாதாரணமாக வாடி விடும் மலர்கள் அல்ல. அது எப்போதுமே வாடாத வாடா மலர.
நீ என் அருகில் இல்லாத போதும் என் இதயத்தில் அமர்ந்திருக்கிறாய் அழகிய நினைவுகளாக.
அவள் அப்படித்தான் என்று காதலனும் அவர் அப்படித்தான் என்று காதலியின் கொண்டிருக்கும் புரிதலின் உச்சமே காதலின் உச்சம்.
ஆறுதல் சொல்ல முடியாத பல வலிகளுக்கு மருந்து உன் காதலும் உன் அன்பும் தான்.
அன்பு ஒரு அழகான உயிர் அது பலர் மீது வந்தாலும் உன்னிடம் மட்டுமே வாழ ஆசைப்படுகின்றது.
நீ வந்து உன் காதலால் அர்த்தம் கொடுக்கும் வரை அன்பு என்பது வெறும் வார்த்தையாக தான் இருந்தது.