அருகில் நீ இல்லாத போதிலும் அனைத்திலும் உன் சாயல் !!
நித்தம் நான் கேட்கும் யாரோ ஒருவரின் பேச்சில் நீ அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைகள் !!
முத்த இமோஜிகள் கூட உன்
இதழை நினைவூட்டுகிறது !!
யாரோ ஒருவரிடம் இருந்து வரும் குறுஞ்செய்திகளில் கூட உன் குரல் கேட்கிறது
உன்னை மறக்க உன் குரல் உடனே உரையாடும் இந்த மனதை நான் என்ன செய்வது ?!
தப்பிச்செல்ல நினைத்தால் நான் போகும் இடமெல்லாம் கண்ணை உறுத்தும் உன் பெயர்
கண்ணை மூடிக்கொண்டால் என் கண்களை அடிமையாக்கிக் கொண்ட முகம் !!
விழும் மழைத்துளி எல்லாம் உன் காதல்
மண்ணெல்லாம் உன் வாசம்
வீசும் அனல் காற்றெல்லாம் உன் கோபம்
காலைக் கீற்றெல்லாம் உன் புன்னகை
மாலைப் பொழுதெல்லாம் நாம் மயங்கிய பொழுதுகள்
இரவெல்லாம் உன் நினைவுகள் வந்து தூங்காதே என்று தாலாட்டு பாடும்
கண் விழித்தால் வானில் வந்து சிரிக்கிறாய் (என் நிலா) !!
மறக்க நினைக்கும் வேளைகளில் மறதியை மறக்க வைத்தால் நான் என்ன செய்வது ?!
-Unasaikothamalli

Last edited: