நிபந்தனையே இல்லாத
ஒரே ஒரு முத்தம்
இத்தனை நாள் ~நீ
எனை வந்து சந்திக்காத
ஏக்கத்தின் சாயலில்
ஒரு முத்தம்.... ♡
எனைத் தேட வைத்து
நீ தென்படாது
ஒளிந்து கொண்ட
மெல்லிய கோபத்தின்
சாயலில் ஒரு முத்தம்.. ♡
உனைக் காணும் நொடி
என் கவலைகள் யாவும்
உடைந்து போகும் படி
அழுத்தமாய் ஒரு முத்தம்..♡.
இறுதியாய் நீ மீண்டும்
விடை பெறும் நேரம்
எந்த சலனங்களுமற்று
நம் பிரியத்தின் பரிசும்
பிரிவின் பரிசுமாக
ஒரே ஒரு முத்தம்....
உனக்காக காத்திருக்கிறேன் வா.... ♡♡♡
ஒரே ஒரு முத்தம்
இத்தனை நாள் ~நீ
எனை வந்து சந்திக்காத
ஏக்கத்தின் சாயலில்
ஒரு முத்தம்.... ♡
எனைத் தேட வைத்து
நீ தென்படாது
ஒளிந்து கொண்ட
மெல்லிய கோபத்தின்
சாயலில் ஒரு முத்தம்.. ♡
உனைக் காணும் நொடி
என் கவலைகள் யாவும்
உடைந்து போகும் படி
அழுத்தமாய் ஒரு முத்தம்..♡.
இறுதியாய் நீ மீண்டும்
விடை பெறும் நேரம்
எந்த சலனங்களுமற்று
நம் பிரியத்தின் பரிசும்
பிரிவின் பரிசுமாக
ஒரே ஒரு முத்தம்....
உனக்காக காத்திருக்கிறேன் வா.... ♡♡♡