• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

தினமும் ஒரு குறள்

அதிகாரம் 80

நட்பாராய்தல்

குறள் 799:


கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும்

விளக்க உரை: கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.
 
அதிகாரம் 80

நட்பாராய்தல்

குறள் 800:

மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும ஒருவுக ஒப்பிலார் நட்பு


விளக்க உரை: குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.
 
அதிகாரம் 11

செய்ந்நன்றியறிதல்

குறள் 101: செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது


விளக்க உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
 
Top