• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

காதல் தொடருமா? தொடராதா?

Rayleigh

Epic Legend
Chat Pro User
யாரோவாய் தொடங்கிய
உறவு அது ...இன்று
யாதுமாகி நிற்கிறது ...
பின்விளைவுகளை
யோசிக்காமல் பின்னி
பிணைந்து போன
இருமனங்கள் காதல்
பிணியில் இன்று
தவிக்கின்றன...

 
அவன் உறுதியாய்
நின்றால்..அவள்

பிரிகிராள் ...
அவள் உறுதியாய்
நின்றால் அவன்
பிரிகிரான் ...
இல்லை யாரோ ஒருவரால்
பிரிக்கப்படுகிறார்கள்...
இதென்ன காதலுக்கு
வந்த சாபமோ...
 
பேசி பேசி
கழித்த இரவுகள்
இன்று மௌனத்தாலும்
பயத்தாலும்
ஆமை போல்
நகர்கிறது...
நொடிமுள்ளும்
அடிக்கடி பார்ப்பதால்
நொடிந்து போனது
போலும்....
 
அன்று தித்தித்த
வானவில்
இன்று அவளின்றி
சற்று நேரத்தில்
அழியும் கானலாய்
தோன்றுகிறது...
அன்று இன்பம்
தந்த வண்ணத்துப்பூச்சி
இன்று அவனின்றி
அழியும் வண்ணமாய்
தோன்றுகிறது...
 
ஆயிரம் கேள்விகள்
என்னுள் உதிக்க ...
ஆயிரம் எண்ணங்கள்
என்னை வதைக்க
கண்கள் விடுதலை
செய்த
கண்ணீர் கேட்கிறது
மனதிடம்...
"இந்த காதல்
தொடருமா....?
தொடராதா....?"

 
Top