N
Naveen_
Guest
Hey Pranisha very very touching and truee daaa...மகளுக்காக...
சுதந்திரமாய் குளத்து நீரில் குளித்து பழகிய
என் குலத்து மீனை ஊரார்
சொல் கேட்டு வம்படியாய் கிணற்று நீரில்
நீந்தவிட்டேன்.
என் அன்புக்கினிய மீன் துடித்துக்கொண்டே
நீந்தினாள்.
ஆனால் எம் குலத்தார் அனைவரும் அவள்
ஆனந்தத்தில் நீந்துவதாக
சொல்லிக் கொண்டனர்.
ஆனால் எனக்கு மட்டும் தெரிகிறது
என் அன்புக்கினிய மீனின் மௌன அழுகுரல்.
தண்ணீருக்குள் அழும் மீனின் கண்ணீரை யார் உணரக்கூடும்.
தள்ளியவனே நான் தானே!!!
காதலானாய் கரம் பிடித்தவன்,
இவளின் கற்பை கண்ணியமாய் காக்க,
காவலனாய் நான் கை கோர்த்தவனோ இவளை கைப்பாவை ஆக்கிவிட்டான்...
இனி என்னுள்
துயிலாத இரவொன்று
எப்போதும் என் நெஞ்சில்
விழித்துக் கொண்டே
இருக்கும்.
மங்கையின் கழுத்தில் மாலையிட்டாலே,
அவளிடம் மையல் கொள்ளலாம்
என்பது தான் உங்கள் சாத்திரம் என்றால்,
அந்த சாத்திரம் என் மகளின் முதல் காதல் முத்தத்தில் எரிந்து சாம்பலாகட்டும்…