#ஐடியா_இல்லாத_தனலெட்சுமி
முத்துப்பாண்டியைப் பார்த்தா ஊரே நடுங்கும்,
ஆனா வேலு பக்கத்து ஏரியாவுக்கு ஜாக்கிங் போனாலே அந்த ஏரியாக்காரனுங்க அடிக்க வருவானுங்க.
முத்துப் பாண்டி ஒரு பெரிய தொழிலதிபர்,
வேலு அரியர்ஸ் கூட கிளியர் பண்ணாம வேலை வெட்டி இல்லாம திரியுற ஆள்.
முத்துப்பாண்டி போலீஸையே புரட்டி எடுக்கிற ஆள்,
வேலு போலீஸைப் பார்த்தாலே பயத்துல ஓடுற ஆள்.
முத்துப்பாண்டியைக் கல்யாணம் பண்ணினா வேலைக்கே போகாம மகாராணி மாதிரி வாழலாம்,
வேலுவைக் கல்யாணம் பண்ணினா வேலைக்குப் போய் அவனுக்கும் உழைச்சுக் கொடுத்து, வீட்டு வேலைகளையும் பார்க்கணும்.
முத்துப்பாண்டிக்கு ஆரம்பத்துலயே ஓகே சொல்லியிருந்தா மூத்த அண்ணனைத் தொழிலதிபராக்கி, ரெண்டாவது அண்ணனுக்கு ஒரு ஹொஸ்பிடலும் கட்டிக் கொடுத்திருப்பான்..
முத்துப்பாண்டிக்கு வயசு அதிகமாக இருப்பதால் அவன் முன்னாடியே மண்டையைப் போட்டுவிடுவான், மொத்த சொத்தையும் ஆண்டு அனுபவிக்கலாம்.
ஆனால் லூசு தனலட்சுமிகளுக்கு முத்துப்பாண்டிகளால் கிடைக்கப்போகும் நன்மைகள் புரிவதில்லை, வேலை வெட்டிக்குப் போகாத வேலுகளைக் கல்யாணம் பண்ணிட்டு காலம் முழுக்க கண்ணீரும் கம்பலையுமாகவே அலைகிறார்கள்.
இவண்
முத்துப்பாண்டி விழுதுகள்