எழில் கொஞ்சும் எழிலி
சில்லென்று மழைச்சாரல் பெய்ய
ஊரெங்கும் மண்வாசம் வீச
முற்றம் தாண்டி வெளியே வந்தாள்
எழிலி
குடை விரிக்க மனமின்றி
மழையில் நனைந்து ஐக்கியம்
ஆனாள்!
தன்னை தொலைத்தாள் !
மழையும் எழிலியும் சங்கமம்
ஆகவே நடந்த நிகழ்வு போல்
ஆனதே!
தன்னிலை உணர்ந்தவள்...
கோபமுற்றாள்!
அவளின் அவன் தீண்டும் அங்கங்கள்
யாவும் இவன் நனைத்து
ஆராதனை செய்வதேன்!?
வெட்கி கூனி குறுகினாள்...
அசரிரி போல் ஒரு குரல்...
எழில் கொஞ்சும் எழிலியே !
நானே உன்னவன்!
மழையாய் நீராய்..உன் வதனம்
தொட்டு !
உன் பெண்மை தீண்டியவன்
நானே!
மகிழ்ச்சி அவளை கவ்வி
ஆரத்தழுவியது...
குழந்தை என குதித்தாள்...
மின்னலாய் தான் குமரி என்பதை
உணர்ந்தவள்...வேண்டாம் வேண்டாம்
நீ தூவளாய் பிற பெண்ணையும்
தீண்டுவது உனக்கு அழகல்ல!
என் ஆடையாய் மாறும்
வரம் தந்தேன்!
கூடல் பொழுதில் உன் மேனியை
எனக்கு இரவலாய் கொடு!
உடுத்திகொள்ள!
தூவானம் விட்டு மேகங்கள் கலைந்து
வெளிர் வானம் ....
அவளை வரவேற்றது!
Happy Sunday Ezhili
Ezhili Na Rain Nu oru Artham irukam
Minmini , Indru thaan enake therinchu
Ezhili Na Rain Nu oru Artham irukam
Minmini , Indru thaan enake therinchu
Last edited: