மந்திர மதியே..
நீயே என்னவன்..
உனை பார்த்து
இதயம் தொலைத்த
ஓராயிரம் கோடியில்
நானும் ஒருத்தி..
பால் சிந்தும்
பட்டுப் போன்ற
வட்ட முகம்...
என் இருள் உலகு
வெளிச்சமாவது
உன் வண்ணத் திருமேனியின்
வாஞ்சை மிகு ஒளியே!!
நீ என்னைச் சுற்றி வருகிறாய்
நானோ உன் நினைவில் தடுமாறி
என்னையே சுற்றிக் கொண்டிருக்கிறேன்!!
என்னை உயிர்ப்போடு
வைத்திருப்பது
உன் ஈர்ப்பு விசை மட்டுமே...
என் மீது உனக்கென்ன கோபமோ??
என்னை விட்டு தூரமாகவே செல்கிறாய்..
உன் பிரிவின் தூரம்
கூடக் கூட
என் ஒட்டு மொத்த உலகின் உயிர்ப்புமே
அழியத் தொடங்குகிறது..
உன்னை தூரமாக இருந்து பார்த்து ரசித்துக் கொள்ள வேண்டும் என்பதே
என் வாழ்வின்
விதியானாலும் அதை
மனதார ஏற்றுக் கொள்கிறேன்...
என் இளமதியே
என்றும் உன் ஈர்ப்பு விசைக்காக
ஏங்கும் உன் உலகம் இவள்...