கவிதை என்றாலே
உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம்
நீ பேசும் ஞாபகமே
அழகு என்றதும் உந்தன் மொத்தம்
ஞாபகம்
ஓவியம் போல் உன்னை வரைந்திடவே
உதிரம் கொண்டு நிறம் எடுப்பேன்
சிலையென உன்னை செதுக்கிடவே
இமைகள் என்னும் உளியெடுப்பேன்
கவிதையைப் போல் உன்னை எழுதிடவே
உயிருக்குள் இருந்து சொல் எடுப்பேன்
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே..