என் விரகம்
தீர்க்க வந்த
விருந்தோ நீ
விழிமூடா
இரவுகளுக்கு
மருந்தோ நீ
தேகம் திறந்து
கொடுத்து
என் ஏக்கத்தை
தீர்த்தாயடி
உன் பாகங்கள்
அளந்தபடி
பக்குவமாய் ருசிக்கிறேன்
வேகம் என்பது
சாலை விதிகளுக்கு
மட்டுமல்ல
சேலை விதிகளுக்கும்
ஆகாத ஒன்று தானே
சோலை மலர்களிடத்தில்
ரீங்காரமிட்டு
தேனுண்ணும்
வண்டு போலே
என் ஆசைகளை
செவிசேர்த்தபடி
அனு அனுவாய் புணர்ந்திடுவேன்
உன் ஆவல்களுக்கும்
செவி சாய்த்தே
அருகில் நீ வந்தால்