நீ இல்லாமல்
எதுவும் இயல்பாய்
இல்லை என்னிடம்...!!!
நீ இல்லாத இரவு
ஏனோ நீண்டுக் கொண்டே
இருக்கிறது ஆழ்கடலை போல...!!!
உன் அழைப்பு இல்லாமல் என்
கைப்பேசியும் உறங்கிப்
போகிறது சமயத்தில்....!!!
உன் வார்த்தைகள் இல்லாமல்
விழி மூடவும் மறுக்கிறது..
விழி நீர் வற்றிடவும் மறுக்கிறது...!!!
நீ இல்லாமல் வெறுமையானது
என் அன்றாட வேலைகளும் சிந்தனைகளும் ...!!!
நீ இல்லாமல் என் உலகினில் அனைத்தும்
நிலா இல்லாத வானம் போல
வெறுமையாய் காட்சியளிக்கிறது.....!!!
நடைப் பிணமாய் உலவுகின்றன எந்தன் உயிரற்ற உடல் மட்டும்...!!!
ஒப்புக் கொள்கிறேனடா
நீ இல்லாமல்
எதுவும் என்னிடம் இயல்பாய் இல்லை என்பதை ...!!!