தானத்தில் சிறந்ததொரு
நிதானம் என்பர் சிலர்...
ஆனால் உள்ளவை அனைத்தையும் விட
உண்மையான தானம்
அத்தனை பேருக்கும் உயிர் தரும்
ரத்த தானம் ஒன்றுதான்...
உயிர்களை பிழைக்க வைக்கும்
உன்னதமான செயல் அதுதான்...
எவ்வளவு கொடுத்தாலும் - நம்மில்
எள்ளளவும் குறையாத செல்வமதை,
"கொடுத்தது தான் கொடுத்தான்,
அதை யாருக்காக கொடுத்தான்...
ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை,
அனைவருக்கும் கொடுத்தான்..."
கொடுக்க கொடுக்க நம்மிடம்
கொழிக்கும் செல்வமே குருதி...
அதை தானம் செய்துப்பார் - உன்
செழிப்படையும் என்பது உறுதி...
பிறருக்கு வாழ்வளித்து, உன்
வாழ்வை செம்மை படுத்திக்கொள்...
குருதி - பிறருக்கு உயிர் தரவே - எனக்
கருதி, தானம் செய்,
ரத்ததானம் செய் .