ஃபெஞசல் புயல்.
கிளம்பியது கடலில்,
அப்புடியே டெல்டா
தஞ்சாவூர், திருவாரூர்,நாகை வழியாக,
லெஃப்ட் பக்கம் கடலூர்,
மரக்காணம்,
மகாபலிபுரம்,
சென்னைக்கு
அருகில் என்று
விளையாட்டு காட்டி,
பாண்டிச்சேரி
அருகில் சில
மணி நேரம்
ரெஸ்ட் எடுத்து
அப்படியே பாண்டியை
படுக்கவைத்து,
விழுப்புரத்தில்
வீர விளையாட்டு
விளையாடி,
திருக்கோவிலூரில்
தில்லானா ஆடி,
திருவண்ணாமலையில்
சிவ தாண்டவம் ஆடி,
கள்ளக்குறிச்சியில்
கண்ணாமூச்சி காட்டி,
திருப்பத்தூர்
ஊத்தங்கரையில்c
ஒய்யாரமாய் புரண்டு,
கிருஷ்ணகிரியில்
கிக் பாக்ஸிங் காட்டி,
ஒசூர் வழியாக
பெங்களூர் நோக்கி
போகுது !
எவன்டா ? ரூட் போட்டு
கொடுத்தது.
நேராக போக
எவ்வளவு வழி இருக்கு,
அதென்ன லெப்ட்ல
ஒரு ஆட்டம், ரைட்ல
ஒரு ஆட்டம் !
நீண்ட இடைவெளிக்குப்
பிறகு தமிழகத்தில்
பெரும்பான்மையான
மாவட்டங்களில்
ஒரே புயல்
இவ்வளவு
மழையையும்,
சூறாவளிக்காற்றுடன்
கரைக்கு வந்த பிறகும்
வேகம் தனியாமல்,
தாண்டவம் ஆடியது
இந்த புயலாகத்தான்
இருக்கும்.
இன்னும் அது அடுத்து
எப்படி ஆடும் ?
என்பதை
பொருத்திருந்துதான்
பார்க்க வேண்டும்.
ஒரு வேளை கர்நாடகா
செல்வதற்கு பர்மீட்
வாங்க வேண்டுமா
என்று தெரியவில்லை!!....
️️️️️️
Mudiyala