2009ல நடந்த ஒரு சம்பவம்
சென்னையில ஒரு பிரபலமான தியேட்டர் அது....
அப்போலாம் அவ்ளோ ஆன்லைன் டிக்கெட் வசதிகள் இல்லாத காலம்....
நானும் என் நண்பனும் அவசர அவசரமா late ஆச்சுன்னு வண்டிய park பண்ணிட்டு டிக்கெட் கவுண்டர் ல போயு நாடோடிகள் படத்துக்கு டிக்கெட் கேக்க... ஹவுஸ்புல்னு அவன் சொல்ல...
என்னடா பண்ணலாம்னு சுத்தி சுத்தி பாத்தப்ப.. ப்ளாக்ல டிக்கெட் விக்கிறவரு கிட்ட வந்து எத்தனை டிக்கெட் வேணும்னு கேட்டாரு... ரெண்டு டிக்கெட்ணானு கேட்டு வாங்கிட்டு உள்ள போயு சீட் நம்பர் பாத்து கரெக்ட்டா உக்காந்தோம்..
அப்போ அங்க வந்த புதுமண தம்பதி ரெண்டு பேரு சார் எங்களுக்கு சீட் சென்டர்ல கெடச்சிருக்கு.. அதனால நீங்க அந்த row ல போயு உக்கார முடியுமான்னு request பண்ணாங்க.. சரி புதுசா கல்யாணம் ஆனா ஜோடின்னு பெருந்தன்மையா நாங்களும் சீட் மாறி உக்காந்தோம்..
மறுபடி ரெண்டு பசங்க வந்தானுங்க.. அண்ணா நாங்கல்லாம் ஒரு கேங்கா வந்திருக்கோம்... எங்க ரெண்டு பேருக்கு மட்டும் வேற row ல சீட்.. So னு காத சொறிய.. எவ்ளோ சோசியல் சர்வீஸ் தாண்டா ஒரே நாள்ல பண்றது.....
சரி போகட்டும்னு மறுபடி மாறி உக்காந்தோம்.. இதுலயே படம் பத்து நிமிஷம் போய்டுச்சு...
ரொம்ப நேரமா தியேட்டர் staff கூட ரெண்டு பேரு அங்கேயும் இங்கயும் சுத்திட்டு லைட் அடிச்சு பாத்துட்டே இருந்தானுங்க.. படம் கிட்ட தட்ட ஒரு மணி நேரம் ஓடிடுச்சு..
சம்போ சிவ சம்போனு goosebumps ஏற படத்தோட involve ஆகி பாத்திட்டு ..
இதே மாதிரி நாமளும் லவ்வர்ஸ் யாரையாச்சும் சேத்து வைக்கனும்டானு படத்தோட ஐக்கியம் ஆகி பாத்துட்டு இருக்கறப்ப ...
எங்க சீட்டு பக்கத்துல ஒரு சத்தம்... என்னன்னு நிமிந்து பாத்தா...
அந்த தியேட்டர் staff எங்க கிட்ட வந்து... சார் கொஞ்சம் டிக்கெட்ட காமிங்கன்னு கேக்க.. நாங்க காட்ட.. சார் நீங்க எடுத்த டிக்கெட் மலை மலை படத்துக்கு... அந்த படம் மேல ஓடுது போங்கன்னு கழுத்த புடிச்சு வெளில தள்ளாத குறை...
நாங்க எந்திருச்சு போறப்ப... ரொம்ப நேரமா சீட் கிடைக்காம சுத்திட்டு இருந்த அந்த ரெண்டு ஜீவன் எங்களை அந்த பார்த்த பார்வை இருக்கே
அப்புறம் வேற வழி இல்லமா மேல போயு மலை மலை பாக்க போனா... உக்காந்த உடனே இன்டெர்வல்...
முதல் பாதி நாடோடிகளும்.. இரண்டாம் பாதி மலை மலையும் பாத்து வீடு வந்து சேந்தோம் ..