உயிரே... நீ எனக்கு உறவாக கிடைத்த உறவு அல்ல எனக்கு வரமாக கிடைத்த உயிர்...
சண்டை பாசம் கோபம் அழுகை புன்னகை இதில் எது என்றாலும் சம்மதம் அது உனக்காக என்றால்..
எனக்கான சிறிய உலகத்தில் நான் அமைத்துக் கொண்ட மிகப்பெரிய உறவு நீ...
தொலைத்தால் கிடைக்கும் பொருள் அல்ல எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் கிடைக்காத பொக்கிஷம் உன் அன்பு.!
கனவுகளோடு காத்திருக்கும் என் விழிகளுக்கு எப்போது விருந்தளிக்கும் உன் விழிகள்...
நினைத்து கூட பார்க்கவில்லை நீ கிடைப்பாய் என்று.. கிடைத்தவுடன் நினைத்து கொண்டேன் நானும் அதிர்ஷ்டசாலி என்று..
என் காதலும் என் கண்ணீரும் உன் ஒருத்திக்கு மட்டுமே சொந்தம்...
சண்டை இட்ட அடுத்த நொடி வந்து மன்னிப்பு கேட்பதை விட மார்பில் சாய்ந்து கோபமா ? என்று கேட்கும் துணை தானே வாழ்வின் பேரானந்தம்.
நான் உனக்கு எப்படினு தெரியல, ஆனா நீ எனக்கு உயிர்...
நீ என்னை உறவாகத் தான் நினைக்கிறாய்.. நான் உன்னை என் உயிராகவே நினைக்கிறேன்.. உயிர் இன்றி உடல் வாழுமா சொல்?
ஆண் எதிர்பார்ப்பது தன்மீது அன்பாயிருக்கும் மனைவியை.. பெண் எதிர்பார்ப்பது தன்மீது மட்டும் அன்பாயிருக்கும் கணவனை...
நாம் உள்ளத்தில் நினைக்கின்ற ஒன்றை நாம் கூறாமலே புரிந்து கொள்ளும் உறவுகளை நம் வாழ்வில் பெறுவது வரமே
இந்த ஜென்மம் மட்டுமல்ல இன்னும் ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் எனக்கு நீ தான் உனக்கு நான் தான்...
ஒவ்வொரு முறையும் உன்னை நினைக்கும் போது ஒவ்வொரு நட்சத்திரத்தை படைக்க சொன்னேன் வெளியே வந்து பார் உன்னை எவ்வளவு முறை நினைக்கிறேன் என்று..
ஒரு கணவன் தன் மனைவிக்கு விலை உயர்ந்ததாக எதையாச்சும் கொடுக்க நினைத்தால் தினமும் மனைவிக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி அன்பா ஆதரவா அரவணைப்பா பேசுங்கள் அத விட உங்க மனைவி எதையும் எதிர் பாக்கமாட்டாங்க... உங்கள தாண்டி எதையும் யோசிக்ககூட மாட்டாங்க.
மனைவியை எங்கும் விட்டுக்கொடுக்காத கணவன், கணவனிடம் எதையும் மறைக்காத மனைவி, நண்பர்கள் போன்ற பிள்ளைகள், இவையாவும் அமைந்தால் வாழ்க்கை சொர்க்கமே.....
மனைவி வாழும் இரண்டாவது கருவறை கணவன் இதயம் தான்..
எப்போது ஒரு பெண் அன்பான கணவனை பெறுகிறாளோ அப்போது அவள் தன்னை அதிர்ஷ்டசாலியாக உணருகிறாள்.
எல்லா பெண்களுக்கும் கிடைத்து விடுவதில்லை எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன், விட்டு செல்லவும் மாட்டேன் என்று இருக்குமளவிற்கு ஓர் ஆண்...
பெண் மனம் விரும்புவது காசோ பணமோ அல்ல, தலை சாய்த்துக்கொள்ள ஒரு தோளும் நடந்ததெல்லாம் சொல்லி தீர்க்க ஒரு உறவும் தான்..
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் ஓர் ஆணுக்கு மனைவிதான் ஓர் பெண்ணுக்கு கணவன் தான் அதற்கு இணை வேறேதும் இல்லை விழுதுகள் மரத்தை தாங்கலாம் வேர் மட்டுமே அதை வாழவைக்க முடியும் கணவன் மனைவி எனும் உறவும் இதைப்போல தான்..
ஒரு பெண்ணுக்கு குழந்தையை கொடுப்பது ஆண்மை இல்லை.. இறுதி வரை அந்த பெண்ணை குழந்தையாக பார்த்து கொள்வதே உண்மையான ஆண்மை.
கணவனின் சிறந்த தோழியாக மனைவியும், மனைவியின் சிறந்த தோழனாக கணவனும் இருக்கும்போது, அவர்கள் சிறந்த தம்பதியாகிறார்கள்..
நான் உயிரோடு இருப்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் என் உயிர் உன்னோடு இருப்பது யாருக்கு தெரியும் உன்னை தவிர...
ஆயிரம் தடவை உன்னிடம் சண்டை இட்டு கொண்டு பேசாமல் இருந்து விட்டு சமாதானம் ஆகும் போதும் ஏனோ தெரியவில்லை புதிதாய் காதலிப்பது போன்றே ஓர் உணர்வு ஏற்படுகின்றது.....
நான் உன்னை நேசிப்பது உன்னோடு வாழ மட்டுமல்ல உனக்காக மட்டும் வாழ.
என் வாழ்க்கையிலே உன்ன விட யார் மேலையும் இவ்ளோ பாசம் வச்சதே இல்லடா புருஷா..
அன்பு நிறைந்த உள்ளம் தான் அதிகம் சண்டை போடும். பிரிவதற்கு அல்ல.. பிரிய கூடாது என்பதற்காக...
உன்னிடம் சண்டை போடும் இந்த இதயத்தை விட்டு விடாதே..! என்னைவிட உன்னை யாரும் நேசித்து விட முடியாது..!
எந்த உறவாக இருந்தாலும் சின்ன சுயநலம் கலந்து இருக்கும்..! சுயநலம் இல்லாமல் நம்மை காக்கும் ஓர் உறவு..! கணவன் மட்டுமே..!!!
என் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படவில்லை .... நீ என்னை திருமணம் செய்தால்தான் என் வாழ்வு சொர்க்கமாக்கப்படுகிறது !!
அன்பு,,, என்ற வார்த்தைக்கு காதல் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இது இடத்துக்கு தகுந்தாற்போல் இடம்மாறி பொருள் தரக்கூடியது. கணவன் மனைவி மீது காதல்... ஆண்...பெண் மீது காதல்... இப்படி இடத்துக்கு தகுந்தாற்போல் காதல் என்ற வார்த்தையானது பொருள் தரும். அதனை மாற்றிப்போட்டால்பிரச்னையாகிவிடும். பார்த்துக்க வேண்டியது நம் பொறுப்புங்க...
அன்பு இந்த மூன்றெழுத்து மந்திரச்சொல்லால் பல விஷயங்களைச் சாதிக்கலாம். ஆனால் இதற்கு எதிர்மறை வார்த்தையான கோபம் என்ற மூன்றெழுத்துச்சொல்லால் பல வேதனைகளை மட்டுந்தான்பெற முடியும். அந்த வகையில் அன்பு மிகவும் வலிமை வாய்ந்தது. யாரிடமும் நீங்கள் அன்பால் சாதித்துவிடலாம்.
உங்களிடம் கோபமாக பேசுபவர்களிடம் கூட அப்போது நீங்கள் அமைதியாக இருந்துவிட்டு அவர்கள் பேசி முடித்து பின் மெதுவான குரலில் அன்பாக பேசிப் பாருங்களேன்.. அந்த ஆளே மன்னிப்பு கேட்டுவிடுவர். எனவே அன்பு என்பது அகிம்சை வழிதாங்க. அதுவே கோபம் என்பது போராட்ட வழி. இதுதாங்க வித்தியாசம். இதனை இடத்திற்கு தகுந்தாற்போல் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டியது முக்கியமுங்க... இதுவே மாற்றிப்பேசிவிட்டால் உங்களுக்கு குழப்பந்தான்..