AgaraMudhalvan
Favoured Frenzy
2. Love
காலம் முழுக்க இருப்பேன், கடைசி வரைக்கும் இருப்பேன், நீதான் எல்லாம் என்றெல்லாம் வாக்குகள் பரஸ்பரம் தந்துவிட்ட பிறகு இருவரில் எவர் ஒருவர் அவர் தந்த வாக்குகளை மீறுகிறார்களோ மற்றவருக்கு அவர்பால் அங்கு வெறுப்பு உண்டாகும்.
அன்பின் இணைநிலை பூரணமான வெறுப்புதான். இவ்வெறுப்பு தன்னை பலிதந்தேனும் பழிவாங்கியே தீரும். ஒரு பிரிவை வெறுப்பு வரைக்கும் கொண்டு போகாமல் நாகரீகமாக வழியனுப்பக் கற்றுக்கொள்ள மனதைப் பழக்குவதுதான் காதலிப்பதற்கு முதல் தகுதி.
காதலில் பிரியும்போது முன்னம் தந்த/பெற்ற வாக்குகளை நினைத்துப் பார்க்காமல் இருக்கவேண்டும். வேண்டாம் என்று சொல்பவரிடம் இருந்து இந்தக் காதலை வலுக்கட்டாயமாக போராடி தக்கவைக்க முடியும் எனும் நப்பாசையில் இருந்து விடுபட வேண்டும். அது ஒருபோதும் நல்வாழ்வைப் பெற்றுத்தராது. இருவர் வாழ்வையுமே சீரழிக்கும்.
To Be Continued