AgaraMudhalvan
Epic Legend
ப்ரிய ஆடவனுக்கு தனது அங்கங்களை தரிசிக்கத் தருவது ஒரு கலை, வேறெந்த கண்களும் கண்டுணராத படிக்கு ஒரு மோகனத்தை உண்டாக்கி உலவவிடுவது வித்தை, பெண்களுக்கு அது இயல்பாகவே கைவருகிறது.
காமத்தை பெருவனமாக்கி அதற்குள் அடிப்பிரதட்சணம் செய்து அழைத்து வந்துவிடுகிறாள், நாம் எதற்கு இந்த ஆரண்யதிற்குள் வந்திருக்கிறோம் என்று அவளே கேள்வியும் எழுப்புகிறாள். உனக்கு வேண்டுமென்றால் தருகிறேன் எனக்கெல்லாம் அதில் அவ்வளவு அவதி இல்லை எனும் அவள் பாவனைகளை பங்கப் படுத்தாதிருப்பதில் ஆண் தேர்ந்தவன்.
உடல்கள் ஒத்திசைகின்ற போது இது நம்மை மீறி நடக்கின்றது என இருவரும் நம்பி நடித்துக்கொள்ளும் நாடகம் இனியது.
பாதியில் நிறுத்தி. இப்போது சொல், இன்னும் நான் உன்னை என்ன செய்யவேண்டும் என ஆண் வினவும் போது நாடகம் முடிவுக்கு வருகிறது. பெண் தன் காமத்தை அறிவிக்கும் போது வனமதிரப் பிளிர்கிறது களிறு, எங்கோ தூரமாக அகவுகிறது மயில்.
எல்லா காட்டுப்பூக்களும் ஒருசேர மலர்ந்து மணக்கின்றன. கால்களுக்குள் தலைகவிழ்ந்து கிடப்பவனைக் கேட்டாள்.
"இப்போது சொல் யாருக்கு யார் இரை."