AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆நிழல்༆•❤꧂
உந்தன் பார்வை
சொல்லும் கதைகளைத்தான்
தினமும் நிலவுக்குச்
சொல்லிக் கொண்டிருந்தேன்.
எங்கு சென்றாலும்
என் பின்னாலே வந்த
நிலவிடம் காரணம் கேட்டேன்.
என்னைக் காதலிப்பதாகச்
சொல்லிவிட்டு மறைந்து கொண்டாள்.
மற்றவர்களுக்குத்தான் அது அமாவாசை எனக்கு மட்டும்
அது உன்னுடைய வெட்கத்தின் நிழல்.