AgaraMudhalvan
Epic Legend
செக்ஸ்... சிலர் இந்த வார்த்தை கேட்டால் முகம் சுளிப்பதும்.. பேசுபவர்களை தவறானவர்கள் என்றும் தீர்மானிப்பதும்...
சில புரிதல் இல்லாததால் தான்...
அது புனிதம் தாம்பத்தியத்தில் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள்..
காதல் வேற டிப்பார்ட்மெண்ட்
காமம் வேற டிப்பார்ட்மெண்ட்
ரெண்டுக்கும் இடையில் அழகான பிணைப்பு இருக்கு... ரெண்டும் ஒன்னு ஒன்னு இல்லாம தனித்தனியாவும் இருக்கும் அது காதலோ நட்போ ... ரெண்டும் ஒரே புள்ளியில் இணையும் போது அது திருமண பந்தம் ... அதாவது தாம்பத்யம். இரண்டும் இணைந்த அந்த உறவும் வாழ்க்கையும் மகிழ்ச்சியா மாறிடுது..
காதல்ன்றது அதிக பட்சம் நல்லா இருக்கனும்ன்ற எண்ணம் தான் அதிகம். என்னைப் பத்தி கொஞ்சம் நினைச்சிக்கிறியா..? இன்னும் கொஞ்ச நேரம் பக்கத்துல இரேன்... எனகாகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கேன்னு உரிமையான கெஞசலும் கொஞ்சலுமாக பிடித்தவரிடம் பரிதவிக்கும்...
அவ(னு)ளுக்கோ எதையும் செய்து விட வேண்டும். நேசிக்கும் அவர் முகம் வாடி விட கூடாது என்பதில் ஆயிரமாயிரம் மெனக்கெடல்கள்....
காமம்ன்றது நீடிக்காது கொஞ்ச நேர சுகமோ.. அவஸ்த்தையோ.. திரும்ப திரும்ப தோணினாலும் அதுக்காக எவ்ளோ புடிச்சவங்கன்னாலும் கேக்க முடியாது.. அதைவிட கேக்கவே கூடாது.. அது ரெண்டு பக்கமும் தோணி தானா நடக்கும் போது மட்டும் தான் அது அழகியல் அல்லது இன்பம்.
ஒருபக்கம் மட்டும் தோணும் போது போயி ( யாசிச்சு) நின்னோம்னா இன்னொரு பக்கம் அது அருவருப்பு.. எதிர்ல இருக்கிறவங்க அந்த நேரம் அந்த உடம்பை அப்டி ஒரு கண்ணோட்டத்துல யோசிச்சுட்டா, பின்ன திரும்ப அப்டி ஒரு உணர்வு இலகுவா வரும்ன்றது ரொம்ப கடினம்...
பெரும்பாலும் திருமண உறவுகள் கசந்து போகவும், இணையர்களுக்குள் பிடிப்பும் அன்பும் குறையவும் இது ஒரு முக்கிய காரணம்.. எப்படி காதல் புரிஞ்சுக்க முடியாம போன வரமோ.. ரணமோ, அது மாதிரி காமமும் புரிதலில் வரம் ..புரிஞ்சுக்க முடியலேன்னா ரணம் தான்...
காதலுக்கு உரிமை இல்லாத இடத்துல கையேந்தினா கூட ஓரளவு புரிதலோட ஏத்துக்க பக்குவப்படுவாங்க... காமத்துக்கு அதற்கான வாய்ப்பும் இல்லை... அதனால காதலை விட காமத்தை ரொம்ப கவனமா கையாளுங்க..
மனைவி இருக்கும் போதோ இல்லாத போதோ அதற்காக ஒரு இணையை தேடாதீர்கள். காமம் மட்டும் என்றால் அது சில காலம் மட்டும் வாழும் கானல் தான்...
தோணுற நிமிசத்திலிருந்து அது மனச விட்டு விலகுற நிமிசம் வரைக்கும் அமைதியா அதை உங்களுக்குள் நிதானமா இருக்க அனுமதிங்க... காமத்தை வெளிப்படுத்த சரியான இணை இல்லாத போது பொறுமையா அதை தனியாவே அனுபவிக்க கத்துக்கிட்டா போதும்... அது உங்களை துன்புறுத்தாது...
மனைவி கணவன் இருவருக்கும் உண்டான புரிதல், அன்பு, காதல்... அதை தாண்டி குழந்தைக்கு அடித்தளம் இந்த தாம்பத்யம்.
தம்பதிகள் தங்கள் இணைக்கு உண்மையாய் இருந்தால் இந்த தாம்பத்யம் நிச்சயம் அசிங்கமாக பார்க்கப்பட்டிருக்காது என்று நினைக்கிறேன்... சிறு புரிதல் தான் காலகாலமாக காதலோடு வாழ்தலிலும் தன் வாழ்க்கைக்கு பிறகு தன் இணையின் ஏக்கம் மிகுந்த வலியிலும் வாழும் காதல்...