AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆குறை நல்லது(காதலில்)༆•❤꧂
இன்னும் கொடுக்கப்படாத ஏதோ ஒன்று என்னிடமும்...
இன்னும் எடுக்கப்படாத ஏதோ ஒன்று உன்னிடமும்..
இருப்பதை போலவே பாவித்து கொள்ளும் இதயத்துக்குள் தான் காதல் உலாவி கொண்டிருக்கிறது ....
எப்பொழுதும் நீ எனக்கு ஒரு குறையே..
நானும் அப்படியே உனக்கு...
நிறைவாய் இருவருக்குள்ளும் எதுவும் வேண்டாம்....
எந்த சொல்லையும் பாதியில் நிறுத்தி விடு..
எந்த அன்பையும் அளந்து கொடு....
எந்த பரிசமானாலும் காத்திருக்க வை...
எந்த பரிமாற்றங்களையும் முன் ஏமாற்றி பின் கொடு....
எப்பொழுதும் ஒரு குறை வைத்து செய்....
எப்பொழுதும் நிரம்பி வடியாத பாத்திரமாகவே ..
நீர் கேட்டு தவிக்கும் வறண்ட நிலம் போலவே...
உணவுக்காய் பறந்து அலையும் பறவைகளை போலவே...
உனக்கும் எனக்குமான இந்த காதல் எப்பொழுதும் ஒரு குறையாகவே நீண்டு முடியட்டும்....
நீயில்லாத உலகில் நானும்
நானில்லாத உலகில் நீயும்
வாழும் நாளில்...
சுமந்து செல்லும் ஏக்கத்தின் விதையாக இருக்கும் இக்குறையை காதல் ஊற்றி வளர்ப்போம்...
வா ...
காதலிக்கலாம்
குறையோடு.....!