AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆என் காதலுக்கு கொஞ்சம் இடம்விடேன்༆•❤꧂
உனக்கும் எனக்குமான காதல் என்பது சரியா என்று கேட்கிறாய்.
உனக்கும் எனக்குமான பிடித்தங்கள் பொதுவில்லையே என்கிறாய்.
உனக்கும் எனக்குமான குணங்கள் வெவ்வேறு தானே என்று யோசிக்கிறாய்.
இருக்கட்டுமே...
நீ வெளிச்சம் என்றால் என்ன??
என் இருளில் கொஞ்சம்பிரகாசி.
நான் புயல் என்றால் என்ன??உன் அமைதியில் கொஞ்சம் அடங்கிக்கொள்கிறேன்.
நீ ஓடிக்கொண்டே இருக்கும் நதி என்றால் என்ன??
என் வறண்ட கரைகளையும் கொஞ்சம் நனைத்துச் செல்.
நீ காற்றாக இருந்தால் என்ன??
உன்னால் மௌனமாய் கொஞ்சம் அசைந்துகொள்கிறேன்.
நீ நெருப்பாக இருந்தால் என்ன??
உன் அணைப்பில் கொஞ்சம் ஒளிர்ந்துகொள்ளும் தீக்குச்சியாகிறேன்.
நீ கடலாகவே இருந்தால் தான் என்ன?? உன்னில் மிதக்கும் கப்பலாகிக் கொள்கிறேன்.
ஆம்
நம் பிடித்தங்கள் வேறு..
நம் இருப்புகள் வேறு..
நம் அளவுகள் வேறு..
என்றாலும்
என் காதலுக்கு
கொஞ்சம் இடம்விடேன்.