AgaraMudhalvan
Epic Legend
பெண்மையை முழுதாக புரிந்து கொண்டேன்"
என்ற சொற்றொடரே பொய்யானது.
அவளின் அகவெளியை அவ்வளவு எளிதில் யாரும் அறிந்து கொள்ள முடியாது.
அதில் என்ன உள்ளது என்ற புதிரே இவ்வுலகின் நீண்ட கேள்வியாக எழுந்துள்ளது.
அதற்கு பதில் புரிந்து கொண்டேன் என்ற போலி தோற்றம் தான் பதிலாய் வந்துள்ளதே தவிர முழுதாய் எட்டியவன் எவனுமில்லை.
*ஆம் அவள் புதிர் தான்*
சில மீளவே முடியாத இன்னல்களிலிருந்து ஒரே நாளில் உறுத்தலின்றி வெளியேறி
இன்னொரு உலகத்திற்கு சென்று வரவும் முடியும்.
அதிலியே புழுங்கி வெந்து தணிந்து வேறு இடத்தில் செல்லாமல் அங்கேயே செத்தொழியவும் முடியும்.
தன்மான திமிரில் எவரையும் சாராமல்
தன்னை மட்டுமே நம்பி சுயசிந்தனை உடைய பெண்ணாகவும் வாழ முடியும்.
எல்லாவற்றுக்கும் அடங்கி அத்தனைக்கும் தலையை ஆட்டும் அடங்கிய பெண்ணாகவும் வாழ முடியும்.
கண்ணீர் சிந்தாமல் அழும் வித்தையை
அறிமுகபடுத்தியவளும் அவள் தான்.
ஊர் அறிய கத்தி கதறி அழுது அனைத்து பார்வையும் தன்மீது விழ வைத்தவளும் அவள்தான்.
*ஆம் அவள் புதிர் தான்*
எல்லா சோகத்தையும் மனதில் ஏற்றிக்கொள்ள முடியாமல் அனைவரிடமும் ஆறுதலுக்காக ஏங்குபவளும் பெண்தான்.
அதே போல, துயரங்களை எல்லாம் வார்த்தையில் வடிக்க முடியாமல் துயருற்ற போதிலும் போராட்டக்குணத்தை இழக்காமல்
தனக்கு தானே ஆற்றி கொள்பவளும் பெண்தான்.
இதுவும் கடந்து போகும் என உணர்த்தியவளும் அவள்தான்.
எதுவும் மறந்து போகாது என
அனத்தியவளும் அவள்தான்.
*ஆம் அவள் புதிர் தான்*
அடுத்தவரின் பிரச்சனைகளுக்கு
உடனடியாக தீர்வு சொல்பவளும் அவள்தான்.
அதே விஷயம் தனக்கென்று வரும் போது தீர்வு காணாமல் அழுது புலம்புவளும் அவள்தான்.
தலைவலியை பிரளயம் போலவும்
உயிரே போகும் வலியை மிகச் சாதாரணமான எடுத்துக்கொள்ளவும் இந்த பெண்க
ளால் மட்டுமே சாத்தியம்.
*ஆம் அவள் புதிர் தான்*