• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❣️அவள் எப்போது அழகாகிறாள் ❣️

Rayleigh

Epic Legend
Chat Pro User
அழகு கண்களில் கண்மை
அணியும்போதா...
சரியும் சேலையைச்
சரியாய் சரி செய்யும்போதா ...
 
முகம் விழும் முடியை
முறையே நகர்த்தும்போதா...
வாச மல்லிகை அவள்
முதுகில் வசைபாடும்போதா...
 
அவள் குரல் என் செவிகளில்
உள்நுழைந்து உருக்கும்போதா..
அவள் பாதம் தொட்ட துகள்கள்
பரவசமாய் பறக்கும்போதா...
 
அவள் கடிக்கும் நகங்கள்
விலக மனமின்றி
கதறும்போதா...
காலணிந்த கொலுசின் ஒளி
என்னைப் போதையாக்கும்போதா...
 
இவையாவும் அழகுதான் ..
ஆனால் என்னருகில்
அவள் நின்று
அவள் விழியில்
என்னைக் கொண்டு ....

 
வலியில் விழும் என்னை
விடாது கட்டி அனைத்து
தேற்றும் போதே அவள்
எனக்கு மிக அழகாய்
தெரிகிறாள் ....
 
செடியிலும் பூத்துக்கொண்டே உன் முகத்திலும் பூக்க
எப்படி முடிகிறது இந்தப் பூக்களால்..

பெண் இயற்கையிலேயே அழகு தான்...
 
Top