காகித இதயம்
வர்ணங்கள் பல வகை ஆனாலும்
நான் என்னை தூய்மையாகவே
வைத்துக் கொள்கிறேன் !
சந்தித்தவர் ,சிந்தித்தவர்,
நேசித்தவர் ,உறவினர் என
அனைவரும் என் மீது
பல வர்ணங்களை பூசி
சென்றனர் !
காலத்தால் அழியாத
சில வர்ணமும் உண்டு
காலப்போக்கில் அழிந்து போன
சில வர்ணமும் உண்டு !
அவரவர்களின் எண்ணம் போல்
இன்பத்தில் சில வர்ணம்
வன்மத்தில் சில வர்ணம்
துரோகத்தில் சில வர்ணம்
அள்ளித் தெளித்துச் சென்றனர் !
தெளித்தது எதுவாயினும்
நான் என்னை மறுசுழற்சி செய்தேன்
வெண்மையாக வைத்துக் கொள்கிறேன் !
என்றோ ஒரு நாள்
மண்ணில் மக்கும் காகிதம்
வாழும் வரை சில நல்ல
வர்ணங்களால் ஒளிரட்டுமே !
நீ வெறுத்தல் நான் கிழிந்து விடுவேன்
நீ அழுதால் நான் நனைந்து விடுவேன
நீ சிரித்தால் நான் மலர்ந்து விடுவேன்
உன் அன்பிற்கு நான் பணிந்து விடுவேன்
இதுவே இந்த காகிதத்தின் குணம்!
வெற்றிடமும் அதிகம் உள்ளது
காலங்களும் குறைந்து போகிறது
இன்னும் எத்தனை வர்ணம் நான் காண்பேனோ !
வர்ணங்கள் பல வகை ஆனாலும்
நான் என்னை தூய்மையாகவே
வைத்துக் கொள்கிறேன் !
சந்தித்தவர் ,சிந்தித்தவர்,
நேசித்தவர் ,உறவினர் என
அனைவரும் என் மீது
பல வர்ணங்களை பூசி
சென்றனர் !
காலத்தால் அழியாத
சில வர்ணமும் உண்டு
காலப்போக்கில் அழிந்து போன
சில வர்ணமும் உண்டு !
அவரவர்களின் எண்ணம் போல்
இன்பத்தில் சில வர்ணம்
வன்மத்தில் சில வர்ணம்
துரோகத்தில் சில வர்ணம்
அள்ளித் தெளித்துச் சென்றனர் !
தெளித்தது எதுவாயினும்
நான் என்னை மறுசுழற்சி செய்தேன்
வெண்மையாக வைத்துக் கொள்கிறேன் !
என்றோ ஒரு நாள்
மண்ணில் மக்கும் காகிதம்
வாழும் வரை சில நல்ல
வர்ணங்களால் ஒளிரட்டுமே !
நீ வெறுத்தல் நான் கிழிந்து விடுவேன்
நீ அழுதால் நான் நனைந்து விடுவேன
நீ சிரித்தால் நான் மலர்ந்து விடுவேன்
உன் அன்பிற்கு நான் பணிந்து விடுவேன்
இதுவே இந்த காகிதத்தின் குணம்!
வெற்றிடமும் அதிகம் உள்ளது
காலங்களும் குறைந்து போகிறது
இன்னும் எத்தனை வர்ணம் நான் காண்பேனோ !
Last edited: