• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

வருங்கால மனைவிக்கு வாக்குறுதிகள்..

Rathiriyin sooriyan

Favoured Frenzy
Chat Pro User
இரண்டு குழந்தை
பிறந்த பின்னும்
இடுப்பு சதை
இரண்டு அடுக்கு ஆன பின்னும்
இதே ஆவலோடு
இதே காதலோடு

இழுத்தணைப்பேன்

மாதம் ஒருமுறை

கழுத்தோடு பொன் நகைகள்
சேர்பேனா தெரியாது.
ஆனால்
தினம் தினம் இதழோடு

புன்னகைகள் கோர்ப்பேன்..

கடல் தாண்டும்

பயணங்கள்
கனவாய் கூட போகலாம்.
ஆனால்
காலம் முழுவதும்
உன் கைவிரல்
கோர்க்கும் பயணம்

இடை நின்று போகாது.

என்னை நீயும்
உன்னை நானும்
குறை கூறி
சண்டை செய்து
நாட்கள் கழியலாம்
ஆனால்
மூன்றாம் நபரின்
மூக்கை ஒருபோதும்
நுழைய விடமாட்டேன்.


அம்மா பிள்ளை
அப்பா பிள்ளை என
குழந்தைகளின் அன்பு
பங்கு பிரியலாம்.

ஆனால் என் அன்போ
உனக்கு கொடுத்த
மிச்சம் தான்
பிள்ளைகளுக்கு....



தோல் சுருங்கி
கூன் விழுந்து
கூந்தல் நரைத்து
காலங்கள் கடந்த பின்னும்

நம் காதல் நரைக்காமல்
பார்த்து கொள்வேன்...


pinky-promise.gif
 
Top