Nenjame
Active Ranker
நா முத்துக்குமார்
எவ்வளவு கொண்டாடினாலும் இன்னும் ஆயிரம் மடங்கு தினம் தினம் கொண்டாடப்பட வேண்டியவர்..
தினமும் உன் பாடல் வரிகளில் தொடங்கும் என் பயணம்
இரவில் "பறவையே எங்கு இருக்கிறாய்" பாடல் இல்லாமல் முழுமை அடைவதில்லை..
என்னை கவிஞர் நா.முத்துக்குமாரின் வரிகளின் மீது அதிகம்
நேசம் கொள்ளச் செய்தது
"7G ரெயின்போ காலனி"
"நினைத்து நினைத்து பார்த்தால்/பார்த்தேன்" பாடல்களின் மீது எனக்கு
அதீத காதல்..
அனிதாவின் இறப்பிற்குப் பிறகு காதலியின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாத கதிரின் மனநிலையை "நினைத்து நினைத்து பார்த்தேன்"
பாடலாக எழுதி இருப்பார் நா.முத்துக்குமார்.
அனிதாவின் மரணம்,
"எடுத்து படித்து
முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு
பெண்ணே"
கதிரின் உயிர்நிலையான பாடல் வரிகளாக கண்ணாடியாய் எதிரொளிக்கும்..
கதிர் தன் ஆற்றாமையை
அழுது தீரா துன்பத்தை
எழுத்தில் அடங்கா காதலை
அவளுடனான அழகிய நினைவுகளை,
"அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படிசொல்வேன் உதிர்ந்து போன மலரின் மௌனமா..
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா..
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே.."
என்று எண்ணி புலம்புகிறான்..
அவளின் பார்வைகள்
பேசிய வார்த்தைகள்
உருவம் மறைந்த பின்னாலும்
அவனுக்குள் அலையடித்துக் கொண்டே இருப்பதை,
"பேசி போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும்
வார்த்தை கரையுமா..?
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள்
கேட்கும் உயிரும் போகும்
உருவம் போகுமா..?"
என பல நூறு கேள்விகளால் அவளுக்குள் இன்னும் தன்னை அதிகம் மூழ்கடித்துக் கொள்கிறான்..
காதல் என்பது முதல் கனவு..
மனிதனுக்கு றெக்கைகள் கொடுக்கும் அந்த முதல் கனவு முடியும் முன்னமே அவனின் தூக்கம் கலைந்து விடுகிறது..
இந்த மொத்த பாடலின் சாரத்தை அனிதாவின் குரலில் ஒலிக்கும்
நினைத்து நினைத்து பார்த்தால் பாடலின்,
"உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்..
தோளில்சாய்ந்து கதைகள் பேச நமது விதியில் இல்லை..
முதல் கனவு போதுமே காதலா..!!
கண்கள் திறந்திடு.."
என்று வரிகள் பிரதிபலித்து விடுகிறது..!
கதிரின் மிச்ச வாழ்க்கைக்கு காரணமே அனிதா தான்... அவளைத் தாண்டி கதிரால் எதையும் யோசனை செய்ய முடியாது.. அவளே அவளின் நிறைநிலை தேவதை கடவுள் என எல்லாமும்..
அனிதாவின்,
"ஒரு தருணம் என்னடா காதலா
உன்னுள் வாழ்கிறேன்..!!"
என்ற வார்த்தைகள் மட்டுமே
கதிர் தன் வாழ்வை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான ஒற்றைப் பிடிமானம்..
ஒவ்வொரு முறையும் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது,
ஒரு காதலை ஒரு வாழ்க்கையை எப்படி ஒரு கவிஞன் தன் வரிகளால் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த முடியும் என்ற கவிஞர் நா.முத்துக்குமார் மீதான வியப்பு பல நூறு மடங்கு கூடிப்போகிறது..
உண்மையில் நா முத்துக்குமார் இறந்துவிட்டார் என்கிற நினைவு எனக்கு எப்போதும் துளியும் எழுந்ததில்லை..
அனுதினமும் பாடல்களாகவும் கவிதைகளாகவும் புத்தகங்களாகவும் நம்மிடையே உரையாடிக் கொண்டிருப்பவரை எப்படி இறந்துவிட்டார் என்று நம்புவதற்கு இந்த சின்னஞ்சிறு மனதிற்கு தெரியவில்லை..
உலகம் அழியும் நொடியில கூட அவரின் பாடல் வரிகள் எங்கோ ஓரிடத்தில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்.. அதுவரை கவிஞர் நா.முத்துக்குமார் உயிரோடு தான் இருப்பார்..