• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

த்வம ஜீவ சரதஸ் சதம் - பகுதி 1

satz

❄️The Perfect Imperfectionist❄️
Senior's
Chat Pro User
Chat Moderator
கொடைக்கானலில் குளிர்காலம் அது, எங்கும் பனி எதிலும் ஈரம். அவளது வீடு ஜன்னலின் கண்ணாடிகளில் பனியின் ஈரம் மெல்ல கோடுகளிட்டு இறங்கிக்கொண்டு இருக்கே அந்த பனி அலைகளை அசையாது பார்த்துக்கொண்டிருந்த அவளது கணங்களில் நீர்திவிலைகள் மெல்ல உருகி கன்னம் தொட்டு வழிந்தது. ஆம் அவள் அழுதுகொண்டிருந்தாள். கையில் இருகப்பற்றிய அந்த காகிதத்தை பிடித்துக்கொண்டு கண்ணாடி வழியே வெளியே போகும் அந்த தபால்காரரை பார்த்தவண்ணம் அழுதுக்கொண்டிருந்தால்.

கடிதங்கள்! வெறும் காகிதங்கள் அல்ல, இவை தாங்கி வரும் கதைகள் பல. வேலைவாய்ப்பு, இறப்பு செய்தி, காதல் முத்தங்கள், காசோலை, கல்யாண செய்தி, தனிமையின் துக்கம், தாய்மையின் பாசம் என எத்தனை எத்தனையோ உணர்வுகளை சுமந்து வந்த கடிதங்களில் இவள் கரம் இருகப்பற்றிக் கொண்டிருக்கும் கடிதம் பிரிவை சுமந்து வந்து இருந்தது. பிரிக்காமலே, படிக்காமலே அது சுமந்து வந்த பிரிவை உணர்ந்திருந்தால் அவள்.

கண்களின் ஈரம் கடந்து, ஜன்னலின் கண்ணாடி கடந்து, கண்ணாடியில் வழியும் ஈரம் கடந்து, தொலைவில் மறைந்துக் கொண்டிருந்த தபால் காரரை வெறித்து பார்த்தவளுக்கு அவளது வாழ்க்கையும் மறைந்து போவதாக தோன்றியது. எச்சில் விழுங்கி அழுகையை அடக்க முயன்றவள் தோற்றுபோனால். மனதோடு சேர்ந்து அவளது கால்களும் எடை இழந்து நழுவுவதை உணர்ந்தவள் மெல்ல நகர்ந்து அருகே இருந்த பிரம்பு பின்னல் சேரில் அமர்ந்து கையில் இருந்த அந்த காக்கி கவரை பிரித்தால், அதனுள் மூன்று மடிப்பாக மடித்து வைக்கப்பட்டிருந்த அந்த பச்சை நிற கொத்து காகிதத்தை பிரித்தவள் நேராக அதன் இறுதி பக்கத்திற்கு திருப்பி படித்தால் "I pronounce Divorce in mutual concern" (அதாவது உங்களுக்கு விவாகரத்து வழங்குகிறேன்) என எழுதி இருப்பதை படித்தவள் மனதில் மின்னலென அந்த எட்டு மாத வாழ்க்கையும் பிளாஷ் அடித்து மறைந்தது. இந்த விவாகரத்து தங்களின் கணமும் அவர்களது கல்யாண பத்திரிகையின் கணமும் ஒன்றாய் தோன்றியது அவளுக்கு. மெல்ல கண்டங்களை மூடி, தலையை ஓய்வாக சாய்த்து அந்த கல்யாண நாளை நினைத்து பார்த்தால் பந்தலின் அருகே இருந்த நீல நிற சாடின் துணியின் நடுவே தங்க நிற தர்மகோல் அட்டையில் வருண் weds வர்ஷா எனும் வார்த்தைகள் எழுத பட்டு இருக்க அந்த அதனை பட்டாடையுடுத்திய கூட்டத்தை கடந்து உள்ளிருந்து வந்தது அந்த மங்கள ஒளி
"மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ் சதம்”

கெட்டி மேளம் கெட்டி மேளம்....மேல சபதம் மெல்ல கதவு தட்டும் ஓசையாக கேட்க கனவு போல களைந்த அந்த கல்யாண கணவனு கடந்து நிஜ உலகிற்குள் வந்தால் வர்ஷா. கதவை தட்டிக்கொண்டு இருந்தது வர்ஷாவின் தந்தை.

தொட்ரும்.....
 
Top