• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

சொல்லாத காதல் "

Rayleigh

Epic Legend
Chat Pro User
அவளும் சொல்லவில்லை
நானும் சொல்லவில்லை
ஆனால் எங்களுக்குள்
அளவுக்கதிகமாய்
தேங்கிக் கிடக்கிறது
அணு அணுவாய் காதல் ....
 
நிம்மதியே இல்லாத
என் வாழ்க்கை அவளோடு
பேசும் சில நிமிடம்தான்
நிம்மதி பெருமூச்சு விடுகிறது
கண்களில் காயம் தீர்க்கும்
கலவை வைத்துள்ளாளோ....
 
ஆயிரம் வார்த்தைகளை
உணர்வுகளைக் கதைகளை
அயராது அவளிடம் பகிரும்
எனக்கு...மனதில் நிரம்பிய
அவள்மீதான காதலை
வெளிப்படுத்த மட்டும்
கால தாமதம் ஆகிறது...
 
காதலைக் கவிதை வழியே
கதைக்கிறேன்....
புரிந்து கொண்டு
ரசிக்கிறாள்
ஆனால் புரியாததுபோல
நடிக்கிறாள் ...என்
இதயதிருடி...
 
நிலவுக்கும் நமக்கும்
உரையாடலா நடக்கிறது...
கடவுளுக்கும் நமக்கும்
உரையாடலா நடக்கிறது
அது போலத்தான் இந்த
சொல்லாத காதலும் ..
உரையாடல்கள் இன்றியும்
உணர்வுகள் பேசும்...
 
Top