guitar
Newbie
காதலின் போது
வெளிப்படையாக
வார்த்தைகளுக்காக
அவ்வப்போது என்
சுவாசம் தொலைத்தேன்…
கல்யாணத்தின் போது
உண்மையை சொல்லியதற்காக
தற்காலிகமாக என்
சுவாசம் தொலைத்தேன்…
பிள்ளைகள் பிறந்த பின்
தேவைகளை நிறைவேற்ற
பதற்றத்தோடு என்
சுவாசம் தொலைத்தேன்
மருமகள் மருமகன்
வந்த பின்னர்
குடும்ப மரியாதைக்காக
சுவாசம் தொலைத்தேன்
பேரன்-பேத்தி வந்த பின்
ஆசைகளை நிறைவேற்ற
ஆவலுடன் என்
சுவாசம் தொலைத்தேன்
இறுதியில்…….
சொத்துகளை பங்கிடும்
வாரிசுகள் சண்டையில்
நிரந்தரமாக என்
சுவாசம் தொலைத்தேன்….
இது தானோ ….
வாழ்க்கை….
வெளிப்படையாக
வார்த்தைகளுக்காக
அவ்வப்போது என்
சுவாசம் தொலைத்தேன்…
கல்யாணத்தின் போது
உண்மையை சொல்லியதற்காக
தற்காலிகமாக என்
சுவாசம் தொலைத்தேன்…
பிள்ளைகள் பிறந்த பின்
தேவைகளை நிறைவேற்ற
பதற்றத்தோடு என்
சுவாசம் தொலைத்தேன்
மருமகள் மருமகன்
வந்த பின்னர்
குடும்ப மரியாதைக்காக
சுவாசம் தொலைத்தேன்
பேரன்-பேத்தி வந்த பின்
ஆசைகளை நிறைவேற்ற
ஆவலுடன் என்
சுவாசம் தொலைத்தேன்
இறுதியில்…….
சொத்துகளை பங்கிடும்
வாரிசுகள் சண்டையில்
நிரந்தரமாக என்
சுவாசம் தொலைத்தேன்….
இது தானோ ….
வாழ்க்கை….