• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

சந்திப்போமா!!

Purplee Heart

Favoured Frenzy
VIP
சாயுங்கால வேளையில சந்தக்கட வீதியில
சந்திப்போமா நாம் சந்திப்போமா ?
தேயும்நிலா வானிருக்க தேவதநீ பக்கம்வர
சிந்திப்போமா நாம் சிந்திப்போமா ?

ஊருசனம் பாக்குமுன்னே ஊதக்காத்து வீசயில
ஊஞ்சலிலே சேர்ந்து விளையாடுவோமா ?
பேருபெற்ற கோயிலில பேச்சியம்மா சன்னிதில
பேசிமணம்தான் முடிக்க வேண்டுவோமா ?

பஞ்சுமிட்டாய்ச் சீலகட்டி பையநீயும் கிட்டவர
பட்டுக்கன்னம் தொட்டு முத்தமிடுவோமா ?
அஞ்சுகமே ஒன்னஅள்ள அத்தான்மனம் கெஞ்சுதடி
அச்சம்விட்டு மெல்லக் கட்டியணைப்போமா ?

வட்டபொட்டு நெத்தியில வச்சிக்கிட்டு வாரவளே
வச்சகண்ணால் செண்டாய் நீயும்பூத்தாயே !
சிட்டுப்போல ஒன்சிரிப்பில் சில்லுவண்டாய்ச் சுத்திவாரேன்
செல்லக்கிளி கொஞ்சி பேசவருவாயா ?

மஞ்சத்தாலி ஒன்கழுத்தில் மாமன்கட்டும் நேரத்துல
மைவிழியே ஓரக் கண்ணால்ரசிப்பாயா ?
மஞ்சத்துல வொன்னஅள்ளி மல்லிகப்பூ வாசத்துல
மையலுடன் கதை சொல்லிமுடிப்பேனே !❣️❣️

f9af1e92701aba35dc865a12dbd5434e.gif

unaku-20.jpg


a61f3d027b0679a3891d9f379e271f5f.gif

 
Top