• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

காதல்

கவிதையால் கட்டிப் போட்டு
நடிப்பால் கெட்டியாய்ப் பிடித்து
இசையால் விலங்கிட்டு
பாசத்தால் இறுக்கப் பிடித்து

கிளிப் பேச்சால் மயக்கம் கொடுத்து
சிறு கோபத்தால் சீண்டி விட்டு
நித்தமும் தலையணையை அணைத்து
முத்தம் கொடுக்க விட்டு

ஊமையாக உலாவும்
உத்தமனே
 
ஒத்தையிலே உறங்குகிறேன்
மெத்தையிலே இடம் ஒதுக்குகிறேன்
மொத்த இரவையும்
வெத்து இரவாகவே முடிக்கிறேன்

ஒட்டி உறங்கும்
நாளுக்காக ஏங்குகிறேன்
குட்டிக் குட்டிக்
கனவுக்குள் நுழைகிறேன்
சுட்டித்தனம் போதுமே
கட்டிப் பிடி வைத்தியம் வேணுமே....
 
பல்லாயிரம் அழகிகளை கடந்து சென்றாலும், என் தேவதை உனைத்தவிர யாரையும் என் கண்கள் பார்ப்பதும் இல்லை, தேடுவதும் இல்லை!

உன்னோடு நான் கொள்ளும் இந்த அழகு பயணம் நெடுந்தூரம், உலகின் இறுதிவரை... கடைக்கோடி உயிரணு இறக்கும் வரை... இறந்த பின்னும், கரம் கோர்த்து பயணிக்கவிருக்கும் "காதல் பயணம்!"
 
தொலைதூரம்
நீ போனால்
உன்னை தேடி
வெகுதூரம் பயணிக்குறது
உள்ளம்..


காதல் பிடிக்குள்
சிக்கி காற்றும்
திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்...



உன்னருகில்
உன் நினைவில
மட்டுமே
என் மகிழ்ச்சியெல்லாம்...


கற்பனையிலிருந்தவன்
கண்ணெதிரே
தோன்றவும்
சொப்பனமோ
என்றெண்ணியது
மனம்...
Nice:hearteyes:
 
அவள் நெருக்கம் தரும் இறுக்கத்தில், நொறுங்கிப் போகிறது, என் வருத்தம்!

எவ்வளவு குளிராக இருந்தாலும் சரி, எவ்வளவு வெய்யிலாக இருந்தாலும் சரி... உன்னை அணைக்காமல் தூக்கம் வருவதில்லை!

கோபத்திலும் எட்டி நிற்காமல், கிட்டவந்து கட்டியணைத்துத் திட்டும் அவள், ஓர் விந்தை!

உன் மார்போடு சாய்ந்த அந்த ஒரு நொடி, என் மனதோடு இருந்த துன்பமெல்லாம் மறந்துபோனது!
 
அவள் நெருக்கம் தரும் இறுக்கத்தில், நொறுங்கிப் போகிறது, என் வருத்தம்!

எவ்வளவு குளிராக இருந்தாலும் சரி, எவ்வளவு வெய்யிலாக இருந்தாலும் சரி... உன்னை அணைக்காமல் தூக்கம் வருவதில்லை!

கோபத்திலும் எட்டி நிற்காமல், கிட்டவந்து கட்டியணைத்துத் திட்டும் அவள், ஓர் விந்தை!

உன் மார்போடு சாய்ந்த அந்த ஒரு நொடி, என் மனதோடு இருந்த துன்பமெல்லாம் மறந்துபோனது!
Vera level
 
இரவில் அவள் இட்ட முத்த கோலங்களைக் கண்டு கண்ணாடியும் கைத்தட்டி சிரிக்க, நான் ரசிக்க, நாணம் என்னை அணைத்ததே!

உடலெங்கும் ஓர் இடம் விடாமல் முத்தமிட்டும் உயிர்த்து எழாத ஒரு பாதுகாப்பு உணர்வு, ஒரே ஒரு முறை நெற்றியில் தந்தபோது எரிமலையாய் வெடித்து சிதறியது காதல் கொண்ட இதயத்தின் உள்ளே!
 
கண்ணுக்கு தெரியாத சிறு சிறு காம துகள்கள் கலந்த
காதலைத் தான் நாம் சுவாசித்தும், குடித்தும், கடந்தும் வந்தோம்…..

கடந்து வந்த சிலர் காமத்துடன் மறைந்து போயும், சிலர்
காதலுடன் கரைந்து போயும் இருந்தனர்…..

கடைசி வரை, காதல் வழி பிறழாதவர்கள் தாம் வரம் பெற்று வந்தவர்கள்….
 
உன் காதுகளோடு
என் உதடுகள் முத்தமிடுவதை
ரகசியம் என்று
ரசித்துக் கொள்கிறாய்.
உன் உதடுகளோடு என் உதடுகள்
ரகசியம் பேசும் போது
ஏன்
முத்தம் என்று கத்துகிறாய் ?
 
அன்றொரு நாள்.. மழைகாலம்.. பூங்காவில் ஆலமரக் குடையில் உன்னருகில் நான்! காதலி நீ கவிதை கேட்டாய்..

"மேடு பள்ளம் வளைவு நெளிவு ஏற்றம் இறக்கம்.. இவை கொண்ட பாதை நீ..! உன்னில் மழைவெள்ளமாய் என்னை பொழியவிடு..!"யென்று முடிப்பதற்குள்..
"ச்சீய்...."யென்று...
 
மனப்பாடம் செய்தே
உன் பெயர் நானும்
நினைவில் கொண்டேனே...

விடுமுறை வேண்டி
அழுதிடும் குழந்தை
நானே ஆனேனே...

தெரிந்த வரை தூரம்
நீ இல்லை என்றால்
தெரித்து மரிப்பேனே...

இதழின் வீணையில்
இன்னிசை நடத்திட
ஆசை கொண்டேனே...

என்றும் அன்புடன்....
 
பல துன்பங்கள் நேர்ந்தாலும்..
உந்தன் உடல் அசைவிலும்..
எனக்கு கொடுக்கும் பிஞ்சு
முத்தத்திலும்.. எனக்குள்
உள்ள துன்பங்கள் எல்லாம்..
உடைந்து தூள் தூளாக
சிதறி போகின்றன..!

முதல் முத்தத்தை நினைவு கூறும்
போதெல்லாம் கைகளால்
முகம் மூடுகிறாய் விரல்
இடுக்கில் வழிகிறது நாணம்..!
 
உன் நிறமோ என் தேகமோ நில்லாது நரை கூடும் வயதில், மெய்யான காதல் பொய்யான மோகத்தை தகர்க்கும்!

வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும், முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும் தான் உலகின் ஆகச் சிறந்த காதலர்கள்!
 
மை தீட்டி வந்தவளே...!
என் மனதை களவாடி சென்றவளே...!
மதி மயங்கி நின்றவனை...!
உன் மாய விழியால் வென்றவளே...!
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே...!
நீ இமை சிமிட்டி பேசியதால்...!
என் இளமை சிதைந்து தான் போனதடி...!
இத்தனை அழகு உன்னிடம்...!
ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்...!
 
உலகின் சிறந்த அதிஷ்டசாலிகள்..

ஒரு பெண்ணின் எண்ணிலடங்கா அன்பிற்கு உரியவனும்...

ஒரு ஆண் காட்டும் மொத்த பாசத்தின் சொந்தக்காரியாக திகழ்பவளும்...
 
உன் செல்ல குறும்பிலும்

இனிய சிணுங்கல்களிலும்

நிலை மாறாத அன்பிலும்

என் மீது வைத்திருக்கும் அக்கறையிலும்

லாகித்து கிடக்கிறேன்

எக்கணமும் நம் காதலுடன்!!!
 
நீ கோவமாக பேசினாலும்
சரி வெறுப்பாக பேசினாலும்
சரி நான் உன் மேல்
வைத்திருக்கும் காதல்
மட்டும் குறையாது...
 
Top