காதலுக்கு தினம் வேண்டுமா!!?
- அவள் ஆசையை அரங்கேற்று
- அவள் சிறகடிக்க இறக்கையாய் இரு
- அவள் வார்த்தைக்கு செவி கொடு
- அவள் அழகுக்கு அறம் சேர்
- சண்டையிட்டு சலித்துக் கொண்டாலும்
- முத்தமிட்டு முரணை முடித்துவை
- அவள் கண் மை அழிய காரணமாகாதே
- அவள் பெண்மையைப் போற்ற தயங்காதே
- உனக்காய் இருக்கும் உன்னவளை
- கால நேரமில்லாமல் காதல் செய்
- அவள் சந்தோஷத்தில் வழி காட்டு
- அவள் கனவிற்கு உரம் போடு
- அவள் முகத்தில் உன் இதழ் தடம் பதி
- அவள் அகத்தில் உன் முகத்தடம் பதி
- வருங்காலத்தை வசந்தமாய் கட்டியெழுப்பு
- இளமை விருந்தால் இனிக்கச் செய்
- புரிதலோடு புன்னகை சேர்த்து
- அவளை அன்பால் அணைத்துக்கொள்
- உனக்காய் இருக்கம் உன்னவளை
- கால நேரமில்லாமல் காதல் செய்