• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

கவிதை சொல்லும் கண்களே....

HoneyLips

Epic Legend
Chat Pro User
கவிதை சொல்லும் கண்களே என்கவிதைக்கு கருவாகின்றன தமிழ்சொல்லும் கவிதை தாய்மொழிசொல்லும் கவிதை எல்லாம் தோற்கின்றன....

:heart1:

உன் விழிசொல்லும் கவிதையில்... ஐயோ... இனி நீ தூங்கும் வேளையில் துவண்டுவிடுமே என் கவிதையும்...

:heart1:


விழித்திரு..!
கவிதை கொடுத்திரு...!
காலமுள்ளவரை உன் விழிசொல்லும் கவிதையை திருடியபடி என் மொழிசொல்லும் கவிதையும்...!


Sugarlips_20240907_175719_0000.png
 
எத்தனை பார்வை பார்க்கின்றாய்....

அதனுள் எத்தனை வார்த்தை வைக்கின்றாய்....

கண்டு கற்றனைத்தூறும் கண்களுக்குள்....

காதல் வெற்றிடம் படர்ந்து நிறைகின்றது....

வெளி முற்றிலும் உந்தன் விழியசைவே!
 
அவள் கண்கள் எனக்கு எல்லாவற்றையும் தந்தது....

காதல் செய்யச் சொன்னது, காணாமல் சென்றது,
காயங்களைத் தந்தது, கண்ணீராலும் காயங்களை ஆற்ற முடியும் என்றது....


ஆனால், அவள் காதலை மட்டும் அது கடைசி வரை கூறவே இல்லை....
 
உன் விழிகளின் பார்வையில் திளைத்த இதழின் மேல் நின்ற வார்த்தை யாவும் தட்டுத்தடுமாறி தத்தளிக்கிறது மை பூசிய மான்விழியை கண்டவுடன்..!

:heart1:

மானுக்கு விரித்த மைவிழியாளின் மாயவலையில் மாட்டிக்கொண்டது என்னவோ மயங்கி நின்ற எந்தன் மனது!
 
Top