• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

கடைசி நொடிகள் ❣️

Rayleigh

Epic Legend
Chat Pro User
சில உறவுகள் காட்டும்
அன்பின் ஆழம் பல
உறவுகளுக்கு எப்போதும்
புரிவதில்லை ...

உணர்வை வெளிப்படுத்தும்
வார்த்தைகளின் அவசியம்
அன்று தான் எனக்குப்
புரிந்தது ...

 
காதல் வலியின் ஆழம்
அன்று சற்று அதிகமாகவே
இருந்தது ...

என் மனம் சொந்தம் கொண்டாடும்
அந்த உறவு வேறோருவரின்
சொந்தமாய் மாறும் தருணம்
மிக அருகில்...

 
அங்கே என் இருப்பை
என்ன செய்தும் நிராகரிக்க முடியவில்லை ...

அந்த உறவிடம் கடைசியாய்
சில வார்த்தைகள் சொல்ல
சந்தர்ப்பம் கிடைத்தது ..

உண்மையே சொல்லிடவா..?
என் மனதில் ஆயிரம்
கேள்விகள்....
 
அவள் முகம் என் கண்முன்னே
முகம் எல்லாம் புன்னகை ..
அவள் கண்கள் என்னைக்
கண்டதும் மகிழ்ச்சியின்
உச்சம் பெற்றது...

அன்று தான் அவளை நான்
கடைசியாய் பார்த்தேன் ..
தொண்டைவரை வந்த
உண்மை வார்த்தைகளுக்கு
அதற்கு மேல் வர
சக்தி இல்லை....
 
அவள் என்னிடம் ஏதேதோ
பேச ...அவையாவும் என்
காதுகளுக்கு
சென்றடையவில்லை....

காதல் சொல்லும் தருணங்களை
எல்லாம் தாண்டி வந்த எனக்கு
அன்று போலி புன்னகையே
தவிர வேறு மாற்று இல்லை...
 
உண்மையில் என் காதல்
அவளுக்கு புரியவில்லையா..?

என் அன்பை அவள்
உணரவில்லையா..?

ஒருதலை காதல் என்று
ஒதுங்கி நிற்காதீர்கள்...

சொல்லாத காதலின் வலி
எப்போதும் மறையாது...
 


உன் நினைவுகளோடு, நீ பிரிந்து
சென்ற பின்பும் பேசுகின்றேன்.
மௌனம் என்னும் வார்த்தைகளால்,
என் கண்கள் சிந்தும் கண்ணீரோடு.
 

நினைவுகள் என்னும் தீயை
நெஞ்சில் வைத்து கொழுத்தி விட்டு விட்டு
நிம்மதியாக நீ சென்றுவிட்டாய்!
நித்தம் நித்தம் நினைத்து பற்றி எரிவது
என் உள்ளம் தானே! என் உயிரே.!
 
Top