கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்
கண்ணீரோடு நன்றி சொல்கிறேன்
கடந்து வந்த பாதைகள்
திரும்பி பார்தேன்
நான் கடந்து வந்த பாதைகளை
என்னை பார்த்து
நானே வியந்து போனேன் ,
இந்த வயதில்
இவ்வளவு தூரம் கடந்து விட்டேனா !
ஆயிரம் ஆச்சரிய குறிகள்
என்னை அன்னார்ந்து பார்த்தது .
தோல்வியின் உதவியோடு
வெற்றியை நோக்கி ஒரு பயணம் .
இந்த பயணத்தில்
சிலர் வந்தார்கள் போனார்கள்
ஆனால்
அவர்கள் பரிசளித்து சென்ற
அவமானங்களும்
ஏமாற்றங்களும் மட்டும்
இன்னும் நெஞ்சோடு .
எப்படி மறப்பது
மறந்திருந்தால் இவ்வளவு
தூரம் வந்திருப்பேனோ. !
என்பதில் எனக்கொரு
சந்தேகம்.
அன்பு , பாசம் , நட்பு , காதல்
இவை எல்லாம் எல்லோரும்
என்னிடம் அளவுக்கு அதிகமாகவே பெற்றுக்கொண்டார்கள்
ஆனால் நான் யாரிடமும்
பெற்றுக்கொள்ளவில்லை
காரணம்
கொடுக்க யாரும்
முன் வரவில்லை .
எத்தனை ஏமாற்றங்கள்
எத்தனை அவமானங்கள்
எத்தனை தோல்விகள்
ஆனாலும் துவண்டு விடவில்லை
இவற்றின் உதவியோடு
வெற்றியை நோக்கி
பயணித்து கொண்டிருக்கிறேன்
அதோ ,
தொடும் தூரத்தில் தான்
என் இலக்கு தொட்டுவிடலாம் ,
அன்று
என் தோல்விகளையும்
அவமானங்களையும் கண்டு
ஏளனமாய் சிரித்தவர்க்கள்
எல்லாம்
இவனை பார்த்தா ஏளனமாய்
சிரித்தோம் என்று !
என் முயற்சியிடம் அவர்கள் தோற்று
என் வெற்றியின் முன்பு
அவமானப்பட்டு நிக்கத் தான்
போகிறார்கள் .
போகும்
பாதைகள் மாறலாம்
என் இலக்கு ஒன்று தான்
முயற்சிகள் மாறாது
அதுவரை
இப்பயணம் தொடரும்.....
Purplee Heart
Last edited: