• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என்ன சொல்ல போகிறாய்... ?❣️

Rayleigh

Epic Legend
Chat Pro User
கவலையின்றி சுற்றி திரிந்தவன் நான் .. பொல்லாத காதல் தொற்றி கொண்டது

உன்னைக் கண்ட முதல் கணமே :heart1:
 
சத்தியமாய் உன் தவறு தான்
கண்கள் என்ற பெயரில் என்னை ஈர்க்கும் காந்தங்களை கொண்டுள்ளாயே...

நான் என்ன செய்வேன் :heart1:
 
இப்போதெல்லாம் உறக்கத்தை அதிகம் விரும்புகிறேன் ....

இரவிலும் உன்னைக் கனவின் வழி காண வேண்டி :heart1:
 
மழைக் கால வானவில்லின் மறு பிறவி நீயோ ...

தலைகீழாய் என்னை ஆட்டிவிக்கும் என் மனதின் பிம்பம் நீயோ :heart1:
 
காதல் சொல்ல திராணி இல்லை ...

கவிதை வழியே சொல்கிறேன் ..

என் காதல் நம் காதலாய் மாற வழி உண்டோ ? :angel::heart1:
 
சிறு பொழுதும் உன்னை காணாமல் இருக்க வேண்டாம்.

இமை நொடியும் உன்னை காணாமல் இருக்க வேண்டாம்.

என்னுடனே இருப்பாயா! என்னை களவாடியவனே.

:heart1:
 
சிறு பொழுதும் உன்னை காணாமல் இருக்க வேண்டாம்.

இமை நொடியும் உன்னை காணாமல் இருக்க வேண்டாம்.

என்னுடனே இருப்பாயா! என்னை களவாடியவனே.

:heart1:
உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன் அன்பே :giggle: :heart1:

அலாதி அன்பின்

அத்தாட்சி நீ ❣️
 

என் அன்புக்கு அடிமை ஆனவர் ஆயிரம்.
நான் அடிமை ஆன ஒர் அன்பு,
அது உன் அன்பு மட்டுமே

:heart1:
 
❣️எண்ணத்தில் நீ இருக்க,
வண்ணத்தில் மழை பெய்ய கண்டேன்.
துளிகள் எங்கும் உன் சாயல்.

எண்ணம் எங்கும் நம் காதல்❣️
 
தலைபில்லா காதல் கவிதை ...
தடுமாற்றும் உணர்ச்சி பெருக்கு

நீ எனக்கு :heart1:
 
மழைக்கு பின் மண்வாசனை

மனதோர சங்கீதம்

நீ எனக்கு ❣️
 
எத்தனை முறை எழுதினாலும்.
என்ன எண்ணி எழுதினாலும்.
சலிக்காமல் இருப்பது!

உன்னை பற்றிய கவிதை!
:heart1:
 
அழகிகள் பல பேர் இங்குண்டு இருப்பினும் உன் மையிட்ட
கண்களை மிஞ்சும் பேரழகு

இங்குண்டோ :heart1:
 
என் காதலுக்கு உரியவனே
உன் முகத்தை பார்த்தால்
போதும் வலிகளை கூட
சுகமாக உணர்ந்திடுவேன்.
உன் முகம் காண
காத்திருப்பதும்

ஒரு சுகம் தான்.
:heart1:
 
காதல் கவிதைகள்
எதற்கு என் காதலே
கவிதையாக அமைந்து

விட்ட பிறகு..!

:hearteyes:
 
அர்த்தமில்லா என் வாழ்வை அர்த்தமாக்கும் உன் காதல் இருக்க ...

பித்தனாய் உன்னை காதலிக்க வேரேனும் காரணங்கள் எனக்கு தேவையோ :heart1:
 
இரவில் உறக்கம் என்னை
ஆட்சி செய்ய என்
உறக்கத்தை ஆட்சி

செய்கிறது உன் கனவுகள்..
:heart1:
 
Top