வாசிப்பது நீயென்றால்
யோசிக்காமல் எழுதுவேன்
கண்களிலும்
மை கொண்டு
பல கவிதைகள்
யோசிக்காமல் எழுதுவேன்
கண்களிலும்
மை கொண்டு
பல கவிதைகள்
என் கண்ணோடு கலந்தவள் நீ..! என் பார்வைகளில் ஒளிந்தவள் நீ ..! என் மனதோடு நிறைந்தவள் நீ …! என் மொழிகளுக்கு புது புது அர்த்தம் தந்தவள் நீ …! என் அரவணைப்பின் சொந்தம் நீ ..! என் கவிதையின் கதாநாயகி நீ …! என் பாசத்தின் ஆணிவேராய் திகழ்பவளும் நீயே…! மொத்தத்தில் என் வாழ்வின் மொத்த அங்கம் நீ …! உன் நினைவுகளை சுமக்கும் சுகமான சுமைதாங்கி தான் நான் …!
எப்படி யோசித்தாலும்
உனைத்தாண்டி
எதுவும் தோணுவதில்லை
என்பதே நிஜம்
என் சிந்தனையில
உன் மீதான என் காதலை
வார்த்தையில் சொல்வதை விட.
வாழ்ந்து காட்டுவதே சிறப்பு....
உன்னுடன் பேசும் போது
நாட்கள் இப்படியே நீளாதா
என்று ஒரு ஏக்கம் என் மனதில்.
அரை நொடி வாழ்ந்தாலும் உன்
அரவணைப்பில் நான் வாழ வேண்டும்.
அடுத்த நொடி மரணம் வந்தாலும்
உன் மார்பில் சாய்ந்து நான் சாக வேண்டும்.
வானில் நிலவை காணவில்லையாம்
விண்மீன்கள் என்னிடம் சொன்னது.
நான் எப்படி சொல்வது!
நிலவு என்னுடன் இருப்பதை...
மனதுக்குள் ஒரு மெல்லிசை என்னவள் உன்னை காணும்போதெல்லாம் எப்போதுமே எனக்கு .
என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அழகாக தெரிகின்றது ஏனென்றால் நான் வாழும் வாழ்வின் அர்த்தம் நீயாதிருப்பதால்.
உன் வருகையே நான் தினமும் எதிர்பார்க்கும் வானவில் …! உன் பார்வை ஒன்றே என் கண்களில் தோன்றும் தரிசனம் …! உன் பேச்சு ஒன்றே நான் தினமும் கேட்க துடிக்கும் திருவாசகம்…! உன் சிரிப்புகள் என் மனதை வருடும் இதமான தென்றல்…! மொத்தத்தில் உன் காதல் பதில் ஒன்றே நான் இந்த உலகில் எதிர்பார்க்கும் காண கிடைக்காத பொக்கிஷம் …!
நீர் இன்றி அமையாது இவ்வுலகம்.
நீ இன்றி அமையாது என் உலகம்.
நீ இன்றி அமையாது என் உலகம்.