துவக்க முத்தமின்றித் துவங்கும்
சத்தமற்ற வெற்று ப் புணர்ச்சியின்
நீளம் தான் என்ன.....?
மூன்று யாமங்கள் என
இரவு மொத்தமாக
நம் வசமிருக்க
மூன்று நிமிடங்களில்
முற்றுப் பெறுகிறதா
என் மீதான உனது மோகம்....??
எனது ஆடை கூட
சரியாக கலையவில்லை...!
நெற்றியில்த் துவங்கி
மூக்கு
உதடு
தாடையென
கழுத்துக்கும்
கீழ் நோக்கி என்னிடம்
ஒரு பயணப் பாதை இருப்பது
அறிந்திருக்கவே இல்லை நீ....!
சிறியதொரு தலை கோதலில்
என்னை வசப்படுத்தி,
உன்
தாக்குதல் துவங்கியிருந்தால் கூட
எனது இமையோர மயக்கம்
மெருக்கேற்றிய என்
முகத்தின் வசியத்தை
கண்டிருக்கலாம்....!!
எனது உடலை இறுக்கிய
உன் மனத்தில்
எவள் மீதான வெறியோ....?
என் முகம் பாராது
கண் மூடி கற்பனை செய்கிறாய்.....!!
உனது உலகைச் சுமந்து
வலியுற்ற முதுகை
கலவியிலாவது தழுகி
தலோடியிருக்கலாம்...
அதனால்..
என் முதுகில்
அணில்க் கோடுகள் விழ
நீயொன்றும் இராமனில்லையே....
இருந்தும்...
என்னில் சீதையை தேடுகிறாய்....!!
நீ
துவங்கும் தருணத்தில்
நான்
வெறும் கல்லடா....!"
என்னைச் செதுக்கி
வடிவம் பார்த்து
சிற்பம் செய்திருந்தால்...
நீ
ரதிதேவியின் அறிமுகம்
பெற்றிருப்பாய்....
எனது
உதிரம் சூடேறும் முன்பே
நீ தணிந்து விடுகிறாய்...!
என்னில் தீ மூட்டி..
சப்த நாடிகள் மீட்டி...
எனது முனகலின்
சப்தஸ்வரங்கள் கேட்க,
உனக்கெங்கே இசை ஞானம்.....?
எனது எச்சிலின்
நறுமணம் மிகுந்த சுவை
தேனிலும் குறைந்ததல்லவே ...
சாக்கடைச் சொற்களும்
சாராயச்சுவையும் உறைந்த
உன் நாக்கு
ருசி அறிவதில்லையே...!
எனக்கெப்படி வேண்டுமென்று
இப்படியும் அப்படியும்
கேட்டிருக்கலாம்.....
அனுபவம் பெற்றவள் என்ற
ஹீனப்பார்வை வேண்டாமெனறே
ஓலச்சத்தமடக்கியொடுங்கி
விடுகிறேன்....!!
எனதங்கங்கள் இன்பங்கள் யாசிக்க..
ஒற்றையுறுப்பு கொண்ட
வெற்றுச் சதையென
விரைந்தென்னை வீணாக்கித்
திரும்பிப் படுக்கும்
உன்னை
வெறித்தப் பார்த்தே கழிகின்றதடா
எனது வாழ்நாள் காமம்....!
எனது சினைமுட்டைகளின்
கருணையில்லையென்றால்
ஆணென்று நீ
மீசை முறுக்க இயலாது ....!!
அது சரி
உனக்கெதுக்குடா மீசை.....
மழித்து விடு....!!
சத்தமற்ற வெற்று ப் புணர்ச்சியின்
நீளம் தான் என்ன.....?
மூன்று யாமங்கள் என
இரவு மொத்தமாக
நம் வசமிருக்க
மூன்று நிமிடங்களில்
முற்றுப் பெறுகிறதா
என் மீதான உனது மோகம்....??
எனது ஆடை கூட
சரியாக கலையவில்லை...!
நெற்றியில்த் துவங்கி
மூக்கு
உதடு
தாடையென
கழுத்துக்கும்
கீழ் நோக்கி என்னிடம்
ஒரு பயணப் பாதை இருப்பது
அறிந்திருக்கவே இல்லை நீ....!
சிறியதொரு தலை கோதலில்
என்னை வசப்படுத்தி,
உன்
தாக்குதல் துவங்கியிருந்தால் கூட
எனது இமையோர மயக்கம்
மெருக்கேற்றிய என்
முகத்தின் வசியத்தை
கண்டிருக்கலாம்....!!
எனது உடலை இறுக்கிய
உன் மனத்தில்
எவள் மீதான வெறியோ....?
என் முகம் பாராது
கண் மூடி கற்பனை செய்கிறாய்.....!!
உனது உலகைச் சுமந்து
வலியுற்ற முதுகை
கலவியிலாவது தழுகி
தலோடியிருக்கலாம்...
அதனால்..
என் முதுகில்
அணில்க் கோடுகள் விழ
நீயொன்றும் இராமனில்லையே....
இருந்தும்...
என்னில் சீதையை தேடுகிறாய்....!!
நீ
துவங்கும் தருணத்தில்
நான்
வெறும் கல்லடா....!"
என்னைச் செதுக்கி
வடிவம் பார்த்து
சிற்பம் செய்திருந்தால்...
நீ
ரதிதேவியின் அறிமுகம்
பெற்றிருப்பாய்....
எனது
உதிரம் சூடேறும் முன்பே
நீ தணிந்து விடுகிறாய்...!
என்னில் தீ மூட்டி..
சப்த நாடிகள் மீட்டி...
எனது முனகலின்
சப்தஸ்வரங்கள் கேட்க,
உனக்கெங்கே இசை ஞானம்.....?
எனது எச்சிலின்
நறுமணம் மிகுந்த சுவை
தேனிலும் குறைந்ததல்லவே ...
சாக்கடைச் சொற்களும்
சாராயச்சுவையும் உறைந்த
உன் நாக்கு
ருசி அறிவதில்லையே...!
எனக்கெப்படி வேண்டுமென்று
இப்படியும் அப்படியும்
கேட்டிருக்கலாம்.....
அனுபவம் பெற்றவள் என்ற
ஹீனப்பார்வை வேண்டாமெனறே
ஓலச்சத்தமடக்கியொடுங்கி
விடுகிறேன்....!!
எனதங்கங்கள் இன்பங்கள் யாசிக்க..
ஒற்றையுறுப்பு கொண்ட
வெற்றுச் சதையென
விரைந்தென்னை வீணாக்கித்
திரும்பிப் படுக்கும்
உன்னை
வெறித்தப் பார்த்தே கழிகின்றதடா
எனது வாழ்நாள் காமம்....!
எனது சினைமுட்டைகளின்
கருணையில்லையென்றால்
ஆணென்று நீ
மீசை முறுக்க இயலாது ....!!
அது சரி
உனக்கெதுக்குடா மீசை.....
மழித்து விடு....!!