உனக்காகத்தானே
இந்த உயிர் உள்ளது உன்
துயரம் சாய என் தோள்
உள்ளது முடியாமல் நீளும்
நாளென்றும் இல்லை யார்
என்ன சொன்னால் என்ன
அன்பே உன்னோடு நானும்
வருவேன்
வான் பார்த்த பூமி
காய்ந்தாலுமே வரபென்றும்
அழியாதடி தான் பார்த்த
பிம்பங்கள் தொலைந்தாலுமே
கண்ணாடி மறக்காதடி
மழை வாசம்
வருகின்ற நேரமெல்லாம்
உன் வியர்வை தரும்
வாசம் வருமல்லவா
உன் நினைவில் நான் உறங்கும் நேரம் அன்பே
மரணங்கள் வந்தாலும்
வரம் அல்லவா
நாம் இருக்கும்
இந்த நொடி முடிந்தாலுமே
நினைவென்றும் முடியாதடி
நாம் எடுத்த நிழற்படம்
அழிந்தாலுமே நிஜமென்றும்
அழியாதடி