அன்று மூச்சுக்கு ஒரு முறை என்னை காண தவித்த அவள் கண்கள் தான் ...இன்று என்னை கண்டும் காணாது போல் கடந்து செல்கிறது ...
நீ மறந்திடும் அளவுக்கு என் காதல் இருத்ததா ...?
தெரியவில்லை......
உன்னை தவிர அனைத்தையும் மறந்திடும் அளவுக்கு காதல் செய்தேன் ....என்பது மட்டும் தெரியும்
அழகு என்று ரசிக்க படும் மழையே,அதிகமானால் வெறுக்கப்படும்போது ....
அதிகமாக விரும்பப்படும் அன்பு மட்டும் என்ன விதி விலக்கா
எல்லோரும் சண்டை போட்டுட்டு சமாதானம் பண்ண தான் மறுபடியும் பேசுவாங்க ஆனா இங்கே இங்கே மறுபடியும் சண்டை தான் வருது
இந்த உலகத்திலே கொடுமையானது நம்மை நேசிப்பவர்கள் நம்மை தவறாக புரிந்து கொள்வது தான் எவ்வளவு முயற்சி செய்தாலும் நம்மை பேச விடாமல் செய்கிறது அவளின் கோபம்
உன் பெயரை காணும் சில நொடி நேரங்களுக்காக
பல மணி நேரம் காத்திருக்கும்,
அந்த நொடிகளுக்கு தெரியும்
நான் உன் மீது கொண்ட
காதலின் உச்சம்..
தூரம் கூட பெரிதாய்த் தெரியவில்லை
அவள் என்னை கண்டும் காணாமல் செல்லும் போது.....
இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய் என்னிடம் ....
கண் முன்னே இருக்கும் என்னை விடுத்து கனவில் தேடுகிறாய்!!!!....
நீ என்னுடையவள் அல்ல என்று விதி முடிவு எடுத்தாலும் எந்தன் வாழ்க்கையில் உன்னை நேசிப்பதை நான் ஒரு போதும் நிறுத்த மாட்டேன் என் அன்பே
உன்னை தவிர்ப்பதும் என்றும் என்னிடம் இல்லை .....நீ என்னை தவிர்ப்பது கூட தாங்கிய என் இதயத்துக்கு நீ தவிப்பதை தாங்காமல் வலிக்கிறது
எனக்கு பிடித்த மாதிரி உன்னை படைத்த இறைவன் ஏனோ எனக்குஎன்று எழுதாமல் விட்டு விட்டான் !!!!
ஜீவன் உள்ள வான் நிலவை நானும் சேர கூடுமோ
பாவம் இந்த என்று பாவம் என்று
சூழ்நிலை கண்டு விட்டு போவேன் என்று எண்ணி விடாதே!!!
இறுகப்பற்றி கொள்வேன் உன்னையும் அதீதமான உன் அன்பையும் ...
அவளுடன்.. அவளுக்காக.. அவள் மடியில்.. அவளாகவே.. அவளிடமே.. என வாழ்ந்து, வீழ்ந்து விடியாமல் போய்விட வேண்டும்.. என் காலைகள்
காத்திருப்பு சற்று கடினமாக தான் உள்ளது ....
ஆனாலும் காத்திருக்கிறேன் ....
என்றேனும் இந்த நிகழ்வு என் வாழ்வில் நடந்துவிடாத என்ற விடை தெரியாத ஏக்கத்தில்
என்னவள் ...
.